கால் நகங்களை சுத்தம் செய்ய சில எளிமையான டிப்ஸ்

Loading...

கால் நகங்களை சுத்தம் செய்ய சில எளிமையான டிப்ஸ்ஒருவர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறார் என்பதை அவருடைய தலை மற்றும் பாதம் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதைக் கொண்டு சுலபமாக சொல்லி விட முடியும். இந்த வகையில் பாதங்களிலுள்ள கால் நகங்களை முறையாக சுத்தம் செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்வோம். பல்வேறு விதமான காலணியுறைகளை இறுக்கமாகவும் மற்றும் பாதங்களுக்கிடையில் காற்று போய் வர போதிய இடைவெளி இல்லாதவாறும் அணிந்தால், அழுக்கான நகங்கள் கால்களை அலங்கரிக்கும் அவலமான நிலை ஏற்படும். எப்படியாயினும், அழுக்கான நகங்களை கொண்டிருப்பது இயற்கையான விஷயம் தான் மற்றும் பலர் அசுத்தமான கால் நகங்களை கொண்டவராகவும் இருக்கிறோம். ஆனால் இந்த கால் நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது. எனவே அத்தகைய எளிதான முறைகளைத் தெரிந்து கொண்டு, கால்களை அழகாகவும் வைக்கலாமே!!! how clean toe nails 1. கால் நகங்களை சிறியதாக வைத்திருக்க வேண்டும். நீளமான கால் நகங்களை வைத்திருப்பது, எந்த காலத்திலும் அழகாக இருந்ததில்லை. நீளம் குறைந்த கால் நகங்கள் சுத்தமானதாக தெரிவது மட்டுமல்லாமல் மிகவும் அழகாகவும் தோற்றமளிக்கும். மற்றுமொரு முக்கியமான விஷயம் சிறிய நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. 2. நகங்களை சுத்தம் செய்ய பிரஷ்களை பயன்படுத்துங்கள். இவை கையாளுவதற்கு எளிமையானதாகவும், கால் நகங்களுக்கிடையில் உள்ள இறந்த தோல் பகுதிகளை சலனமற்று நீக்கிட செய்து,கால் நகங்களை அழகாக தோற்றமளிக்கச் செய்கின்றன. 3. குளிக்கும் வேளைகளில் கால் நகங்களை சுத்தம் செய்ய மறந்துவிடக் கூடாது. குளிக்கும் போது உடல் அழுக்கினை நீக்கவும், உடல் துர்நாற்றத்தை நீக்கவும் சோப்புகளை பயன்படுத்துவோம். அவற்றையே கால் நகங்களை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்த ஏன் யோசிக்க வேண்டும்? அவ்வாறு மென்மையான சோப்பினை பயன்படுத்தும் போது, நகங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மட்டும் சுத்தம் செய்யாமல், பாதத்தின் முன் மற்றும் குதிகால் பகுதிகளையும் சுத்தம் செய்ய மறக்கக் கூடாது. 4. காலணிகளை அதிகம் உபயோகிப்பவராக இருந்தால், அவற்றை நன்றாக உலர வைத்த பின் அணிய வேண்டும். ஏனெனில் தொடர்ச்சியாக ஈரப்பதம் படும் வகையிலும் மற்றும் பாதங்களை மூடி வைப்பதன் மூலமும், கால் நகங்கள் எளிதில் உடையக் கூடியதாகவும் மற்றும் வறண்டும் போய்விடும். எனவே ஷூக்களிலிருந்து விடுதலை கிடைக்கும் அந்த சில நாட்கள், கால் நகங்களை புத்துணர்வு பெறச் செய்யவும் மற்றும் காலணிகளுக்குள் சுத்தமான காற்று சென்று வரவும் செய்ய வேண்டும். மேலும் பாதங்கள் அதிகமாக வியர்த்தால், அவற்றின் மீது கொஞ்சம் டால்கம் பவுடரை காலையிலேயே தூவி விடுங்கள். இதன் மூலம் பாதங்கள் சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பது மட்டுமல்லாமல் நறுமணத்தையும் கொடுக்கும். 5. நக வெட்டிகளில் காணப்படும் நகங்களை சுத்தம் செய்யும் கருவிகளை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். இது நகங்களை சுத்தம் செய்வதுடன் அந்த பகுதிகளில் உள்ள அழுக்குகளையும் நீக்கிவிடும். 6. இறுதியாக, கால் நகங்களை சுத்தமாகவும், அழகானதாகவும் காட்சியளிக்கச் செய்ய, தோலின் நிறத்தில் நெயில் பாலிசை போட வேண்டும். அப்பொழுது நகங்கள் புதியனவாக தோற்றமளிக்கும். ஒவ்வொரு வாரமும் பழைய நெயில் பாலிஷை நீக்கிவிட்டு, புதியதாக போட மறந்துவிடக் கூடாது. அவ்வாறு செய்யும் போது நகங்கள் தொடர்ச்சியாக புதியனவாக தோன்றும். அதேப்போல வாரத்திற்கொருமுறை மேற்கூறிய வழிமுறைகளில் நகங்களை சுத்தம் செய்திட வேண்டும். குறிப்புகள்: நகங்களை வெட்டும் போது அவை சமமாகவும் மற்றும் அழகாகவும் வெட்டுங்கள். ஏனெனில் சமமற்ற நகங்கள் பார்வைக்கு அருவருப்பாகவும் மற்றும் அழகற்றதாகவும் இருக்கும். நகங்களை வெட்டும் போது, அவற்றில் இயற்கையாகவே காணப்படும் வளைவுகள் அல்லது கோடுகளைத் தொடர்ந்து வெட்டுங்கள், அப்படி செய்யும் போது நகங்கள் இயற்கையானதாகவும் சுத்தமானதாகவும் தோற்றமளிக்கும். நகங்களின் வளைவானது, கோடுகளை விட மிகவும் குறைந்த அளவே மோசமானதாக இருக்கும். ஆனால் கோட்டினை நோக்கமாக கொண்டு, நகங்களை அழகுபடுத்தினால் நல்லது. எச்சரிக்கைகள்: பாதங்களில் வெட்டுகள், காயங்கள் இருந்தால் கடினமான சோப்புகள் தோல் பகுதிகளை பாதித்து விடும். கால் நகங்கள் நன்றாக வளர்ச்சி பெற்றவையாக இருந்தால், யாராவது ஒருவரை உதவிக்கு வைத்துக் கொண்டு நகங்களை வெட்டுங்கள் அல்லது மருத்துவரை அணுகி தேவையான முன்னெச்சரிக்கைகளை அறிந்து கொள்ளுங்கள்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply