கால் ஆணிக்கு காரணமாகும் காலணிகள்

Loading...

கால் ஆணிக்கு காரணமாகும் காலணிகள்கால்களில்தான் அதிகமான வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. கால் விரல்களின் இடுக்குகளில் வியர்வை தங்கினாலோ, அதிக நீர் கோர்த்தாலோ தடித்துப்போய் காளான் குடை போல தோன்றும். அதிகப் புழுக்கம், அதிகமாக மழைநீர் படுவதால் இப்படி ஏற்படும். சிலருக்கு சொறி, சிரங்கு போன்றவை வரும்.

இவர்கள் காலுறை அணிவதில் கவனம் செலுத்த வேண்டும். பெரும்பாலும் பருத்தியினால் ஆன காலுறைகளை அணிய வேண்டும். கால் எப்போதும் உராயக்கூடியதும், அழுத்தம் ஏற்படுத்திக் கொள்வதுமாகத்தான் இருக்கும். அதனால் தான் காலாணி ஏற்படுகிறது.காலின் வெளிப்பகுதியில் உள்ள தோல் அடர்த்தியாகி வலி ஏற்படுகிறது. சீரான வடிவத்தில் உள்ள காலில் காலாணி வராது.

அப்படியே வந்தாலும் வலி அதிகமாக இருக்காது. வெறுங்காலுடன் நடப்பது, காலில் அதிக அழுத்தம் கொடுக்கும் வகையில் வேலை செய்வது, பொருத்தமில்லாத செருப்பு அணிவது போன்றவைதான் இதற்குக் காரணம். வெதுவெதுப்பான தண்ணீரில் காலை சில நிமிடங்கள் வைத்துக் கொண்டால் வலி குறையும். காலாணியும் வராது.

எனவே, சரியான காலணியை அணிந்து காலாணியைத் தவிருங்கள். தினமும் காலை, மாலை வேளையில் குளிக்கும்போது கால்களை சுத்தமாக கழுவிக்கொள்வதுடன், வெளியில் போய்விட்டு வீடு திரும்பினாலும் சுத்தம் செய்வது அவசியம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply