கால்களில் ஏற்படும் வறட்சியைத் தடுப்பது எப்படி?

Loading...

கால்களில் ஏற்படும் வறட்சியைத் தடுப்பது எப்படிமருத்துவ காரணங்களை ஒதுக்குங்கள்

சரும வறட்சி என்பது சில நோய்களுக்கான அறிகுறியாகும். அதே போல் சில மருந்துகள் உண்ணும் போது, அதன் பக்க விளைவாக உங்கள் சருமம் வறட்சியடையும். அப்படிப்பட்ட நேரத்தில், உங்களுக்கு ஏற்பட்டுள்ள சரும வறட்சிக்கு காரணம் மருத்துவ நிலையா அல்லது சரும பிரச்சனையா என்பதை உங்கள் மருத்துவரை அணுகி உறுதி செய்து கொள்ளுங்கள்.

சரியாக குளியுங்கள்

கால்களில் ஏற்பட்டுள்ள சரும வறட்சியை ஆற வைக்க நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் என்னவென்று தெரியுமா? அது மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அளவுக்கு அதிகமாக குளித்தால், அது நீண்ட நேரமாக இருந்தாலும் சரி அதிக தடவையாக இருந்தாலும் சரி, அது உங்கள் பிரச்சனையை மோசமடைய செய்யும். இதனால் சருமம் மேலும் வறண்டு போகும்.

வெந்நீரும் சோப்பும் உங்கள் சருமத்தில் உள்ள அதிமுக்கிய ஈரப்பதத்தை அளிக்கும் எண்ணெய்களையும் மாயிஸ்சரைஸர்களையும் நீக்கி விடும். ஒரு நேரத்தில் 10 நிமிடங்களுக்கு மேல், ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல் வெந்நீரில் குளிக்காதீர்கள்.

மாயிஸ்சரைசிங் சோப்புகள் பயன்படுத்துங்கள். இல்லையென்றால் சோப்பே பயன்படுத்தாமல் குளியுங்கள்.

குளித்த பின் சரியாக துடைக்கவும்

குளித்த பின், சருமத்தை வேகமாக கைய வைப்பது மட்டும் முக்கியமல்ல; சரியாகவும் காய வைக்க வேண்டும்.

துண்டை சருமம் முழுவதும் தேய்ப்பதற்கு பதிலாக, அதனை மெல்ல ஒத்தி எடுங்கள். நீங்கள் அழுத்தி தேய்க்கும் போது சருமத்தில் இருந்து ஈரப்பதத்தையும் எடுத்து விடும்.

ஈரப்பதத்தை அதிகரியுங்கள்

வீட்டில் ஈரப்பதம் அதிகரிக்கும் போது உங்கள் சருமத்திலும் ஈரப்பதம் நீடிக்கும். வறண்ட, வெப்பமான காற்று உங்கள் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை எடுத்து விடும். அதனால் இரவு நேரத்தில் படுக்கையறையில் வெப்பமேற்றும் கருவி ஒன்றை சின்னதாக வைத்துக் கொள்ளுங்கள்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply