காலி பிளவர் மிளகு பிரட்டல்

Loading...

காலி பிளவர் மிளகு பிரட்டல்தேவையான பொருட்கள் :

காலிபிளவர் பெரியது – 1
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பூண்டு – 6 பல்
மிளகு – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
நெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

* வெங்காயம், பூண்டு இரண்டையும் பொடியாக அறிந்து கொள்ளவும்.

* காலி பிளவரை பெரிய பூக்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் நெய்விட்டு கடுகு, சோம்பு தாளித்து நறுக்கிய வெங்காயம், வெள்ளைப்பூண்டு இரண்டையும் வதக்கவும்.

* அத்துடன் காலிபிளவரைச் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து மிதமாக சூட்டில் வேக விடவும்.

* மிளகு, சீரகம், வரமிளகாய் இவற்றுடன் சிறிது வெங்காயம் சிறிது வெள்ளைப்பூண்டு சேர்த்து அரைத்து, நெய்விட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

* காலிபிளவர் வெந்ததும், வதக்கிய மிளகு மசாலாவைச் சேர்த்து மிதமான சூட்டில் சிறிது நெய்விட்டு முறுகவிட்டு எடுத்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply