காலிஃப்ளவர் வறுவல்

Loading...

காலிஃப்ளவர் வறுவல்காலிஃப்ளவர் – ஒன்று
வெங்காயம் – இரண்டு
எண்ணெய் – மூன்று டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – மூன்று கொத்து
அரைக்க:
சோம்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் – அரை டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி – அரை டேபிள் ஸ்பூன்
பூண்டு – மூன்று பல்
உப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

காலிஃப்ளவரைப் சிறிய துண்டுகளாக பிரித்து உப்பு கலந்த வெந்நீரில் ஐந்து நிமிடம் போட்டு எடுத்து சாதாரண குளிர்ந்த தண்ணீர் விட்டு இரண்டு முறை அலசி வைக்கவும்.
அரைக்க வைத்துள்ள பொருட்களை விழுதாக நன்கு அரைத்து எடுத்து காலிஃப்ளவரில் பிசறி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயத்தை நீள நீளமாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி சிவந்ததும் கறிவேப்பிலை போடவும்.
பிறகு காலிஃப்ளவரைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து அடிக்கடி கிளறி விடவும். வெந்து, சிவந்து நன்கு சுண்டி வந்ததும் இறக்கி மல்லி இலை தூவவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply