காரட் புட்டு

Loading...

காரட் புட்டுகாரட் – கால் கிலோ
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – மூன்று
உளுத்தம் பருப்பு – இரண்டு டேபிள் ஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – ஒரு டீஸ்பூன்

காரட்டை கழுவி தோல் சீவி துருவிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சை மிளகாயை இரண்டிரண்டாக கீறிக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு போட்டு சிவந்ததும் கடுகு, சீரகம் போட்டு வெடிக்க விடவும்.
பிறகு வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை போட்டு இரண்டு நிமிடம் வதக்கி காரட், உப்பு சேர்த்து வதக்கவும்.
மூன்று நிமிடம் வதக்கி விட்டு அடுப்பை அணைத்து பாத்திரத்தை மூடி அப்படியே அடுப்பில் பத்து நிமிடம் வைக்கவும். சூட்டிலேயே வெந்து விடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply