காரக்கொழுக்கட்டை

Loading...

காரக்கொழுக்கட்டைமேல்மாவிற்கு:
அரிசிமாவு – ஒரு கப்
தண்ணீர் – 2 கப்
உப்பு – அரை மேசைக்கரண்டி
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
உளுத்தம்கொழுக்கட்டை செய்வதற்கு:
வெள்ளை உளுத்தம் பருப்பு – கால் கப்
மிளகாய் வற்றைல் – 5
கடுகு – அரை மேசைக்கரண்டி
உப்பு – அரைத் தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
துவரம் கொழுக்கட்டை செய்வதற்கு:
துவரம் பருப்பு – முக்கால் கப்
மிளகாய் வற்றல் – 5
தேங்காய்த் துருவல் – கால் கப்
உப்பு – முக்கால் தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி

தேவையானப் பொருட்களைத் தயாராய் எடுத்து வைக்கவும். உளுத்தம் பருப்பையும், துவரம் பருப்பையும் தனித்தனியே மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு, சுமார் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

மேல்மாவுத் தயாரிக்க, முதலில் ஒரு வாணலியில் இரண்டரைக் கப் தண்ணீர் ஊற்றி, இரண்டு மேசைக்கரண்டி உப்பு, அரை மேசைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

கொதிக்கும் நீரில் அரிசி மாவினை சிறிது சிறிதாகக் கொட்டி, கட்டிகள் விழாதவாறு கரண்டியால் நன்கு கலக்கிவிடவும்.

மாவு நன்கு திரண்டும் வரும் வரை கிளறிவிடவும். தண்ணீருக்கு ஏற்ற அளவு மாவினை சேர்த்துக் கொள்ளவும். திரண்டு வந்ததும் இறக்கி ஆறவிடவும்.

இப்போது பூரணத்திற்கு, ஊறவைத்துள்ள இரண்டு பருப்புகளையும் ஐந்து ஐந்து மிளகாய் வற்றல், அரைத் தேக்கரண்டி உப்பு சேர்த்து தனித்தனியே மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். அரைத்தவற்றை ஒரு இட்லித் தட்டில் கொட்டி, பானையில் வைத்து சுமார் 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து அதில் தேங்காய்த் துருவலைப் போட்டுக் கிளறவும். இதனை துவரம்பருப்பு பூரணத்திற்கும், உளுத்தம்பருப்பு பூரணத்திற்கு தனித்தனியே செய்யவேண்டும்.

அதில் வேகவைத்து எடுத்துள்ள அரைத்த பருப்பு மசாலாவை உதிர்த்துக் கொட்டவும். முதலில் ஒரு பருப்பிற்கு செய்து எடுத்துவிட்டு, மீண்டும் மற்றொரு பருப்பிற்கு செய்யவும்.

அத்துடன் கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி சுமார் 3 நிமிடங்கள் பிரட்டிவிட்டு பிறகு இறக்கவும்.

பூரணத்தை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.

பிறகு மேல்மாவினை சிறிது எடுத்து உருட்டி, கைகளில் எண்ணெய்த் தடவிக் கொண்டு, கிண்ணங்களாக செய்து அதனுள்ளே பூரண உருண்டையை வைத்து ஓரங்களை மூடவும்.

இதே போல் அனைத்து மாவினையும் கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் அடுக்கி பானையில் வைத்து வேகவிடவும்.

இந்த முறையில் மாவு, பூரணம் இரண்டும் ஏற்கனவே வெந்து இருப்பதால் அதிக நேரம் வேகவைக்க வேண்டியதில்லை. ஒரு சில நிமிடங்கள் மட்டும் வேகவைத்து இறக்கிவிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply