காது குடையலாமா? கூடாதா?

Loading...

காது குடையலாமா  கூடாதாநம்முடைய தினசரி செயல்பாடுகளுக்கு முக்கியமானது காதுகள் ஆகும். மேலும், பேச்சுத் திறனைத் தீர்மானிப்பதிலும் காதுகளுக்கு முக்கியப் பங்கு உண்டு.

உடலின் மற்ற பகுதிகளைச் சுத்தம் செய்வதுபோல காதுகளை சுத்தம் செய்ய வேண்டியதில்லை. காது தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ளும் திறன் கொண்டது. அதனால்தான், காதிலிருந்து மெழுகு போன்ற குருமி தானாகவே வெளியேறுகிறது. நாம் அதை உணராமல் காதுகளில் ஹேர்பின், பட்ஸ் என ஏதாவது ஒன்றை வைத்து சுத்தம் செய்ய நினைக்கிறோம். இதனால், மேலும் அந்த அழுக்கை உள்ளே தள்ளுவதுடன் காது ஜவ்வையும் சேதப்படுத்துகிறோம்.

காதில் அடிபட்டு ஜவ்வு கிழிந்துவிட்டால் கூட, அதன் ஜவ்வு 2 வாரங்களில் தானாகவே குணமாகிவிடும் அபார ஆற்றல் கொண்டது. அதனால் காது விஷயத்தில் நாம் எதுவும் செய்யா மல் இருப்பதே காதுகளுக்கு நல்லது. காதுகளில் ஏதாவது பிரச்னை என்றால் மருத்துவரிடம்தான் செல்ல வேண்டும். நாமே சுய மருத்துவம் பார்க்கக் கூடாது.

மருந்துக்கடைகளில் சொட்டு மருந்து வாங்கிப் பயன்படுத்துவது பெரிய தவறு. விவரம் தெரிந்த மருத்துவர்கள் சொட்டு மருந்துகளைப் பரிந்துரைப்பதில்லை என்பதை மறக்காதீர்கள். இந்த சொட்டு மருந்தால் காலம் முழுவதும் காதில் சீழ் வரும் வாய்ப்புதான் உண்டு!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply