காதல் தோல்வியா? திருமண உறவு முறிந்து விட்டதா? கைகொடுக்கும் பேஸ்புக்

Loading...

காதல் தோல்வியா  திருமண உறவு முறிந்து விட்டதா கைகொடுக்கும் பேஸ்புக்சமூக வலைத்தளங்களின் முடிசூடா மன்னனான பேஸ்புக் புத்தம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தன்னுடைய பயனாளர்களுக்கு பேஸ்புக் புத்தம் புதிய வசதியை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் காதலர்களுக்காகவும், திருமண பந்தத்தை முடித்துக் கொண்டவர்களுக்கும் பயனளிக்கும் விதமாக புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது காதல் முறிந்து போனாலோ அல்லது திருமண பந்தத்தை முறித்துக் கொண்டாலோ குறித்த நபரை Unfriend அல்லது Block செய்வது வழக்கும்.

இனிமேல் இவ்வாறு செய்யாமல் See Less என்ற ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது உங்களது பேஸ்புக் ஸ்டேஸை மாற்றியமைக்கும் போது இந்த ஆப்ஷன் காட்டப்படும், இதில் குறிப்பிட்ட நபரின் புகைப்படம், வீடியோ மற்றும் போஸ்ட்களில் மாற்றங்களை செய்ய முடியும்.

இந்த ஆப்ஷனில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நபரின் போஸ்ட்கள் உங்களுக்கு வராமல் குறைப்பதுடன், உங்களுடைய எந்தெந்த போஸ்ட்களை அவர் பார்க்கலாம் என்பதையும் தேர்ந்தெடுக்க முடியும்.

அதுமட்டுமின்றி Privacy Settings மூலம் உங்களது போஸ்ட்களை பார்க்க விடாமல் தடுக்கவும் முடியும்.

தற்போது சோதனை முயற்சியாக அமெரிக்காவில் செயல்படும் இந்த வசதி, வெற்றி பெறும் பட்சத்தில் உலகெங்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply