கழுத்தில் உள்ள கருமையை நீக்க சில எளிய வழிகள்!!!

Loading...

கழுத்தில் உள்ள கருமையை நீக்க சில எளிய வழிகள்!!!எலுமிச்சை மற்றும் பேக்கிங் பவுடர்

கழுத்தில் ஏற்படும் சுருக்கத்தை சரிசெய்ய எலுமிச்சை மற்றும் பேக்கிங் பவுடர் ஓர் நல்ல காம்பினேசன். எலுமிச்சை ப்ளீச்சிங் ஏஜென்ட்டாக பயனளிப்பதால், உங்களது கழுத்து பகுதி நன்கு பொலிவடையும் மற்றும் பேக்கிங் பவுடர் உங்களது கழுத்து பகுதி சருமத்தை சுருக்கம் அடையாமல் இறுக்கமாக வைக்கவும் உதவுகிறது.

தக்காளி மற்றும் எலுமிச்சை

மாஸ்க் தக்காளி இங்கு ப்ளீச்சிங் ஏஜென்ட்டாக இருந்து உங்களது கழுத்தில் ஏற்படும் கருப்புக் கோடுகளை அகற்றி வெண்மையடைய உதவுகிறது.

தக்காளி ஜூஸை உங்களது கழுத்தில் நன்கு தேய்த்து கழுவிய பின்பு எலுமிச்சை ஜூஸை அதேப்போல பயன்ப்படுத்தவும். பின்பு நீங்கள் இந்த மாஸ்க்கை கழுத்து பகுதியில் உபயோகப்படுத்தி 2௦ நிமிடம் கழித்து தூய்மையான நீரில் கழுத்தை கழுவினால். சருமம் மென்மை அடையும்.

வெள்ளரி மற்றும் தக்காளி

வெள்ளரியையும், தக்காளியையும் நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்பு அதை கழுத்தில் மாஸ்க் போடவும். இது உங்களது கழுத்து பகுதி சருமத்தை இறுக்கமடைய உதவுகிறது. உங்கள் மேனி வெண்மையடைய விரும்பினால் இதோடு நீங்கள் எலுமிச்சையையும் சேர்த்துக் கொள்ளாலாம்.

வால்நட் மாஸ்க்

உங்களது கழுத்து பகுதியில் தங்கும் இறந்த செல்களை அகற்ற இந்த வால்நட் மாஸ்க் பயன்படுத்தலாம். மற்றும் வால்நட்டில் உள்ள வைட்டமின் ஈ உங்களது கழுத்து பகுதி சருமத்தை மிருதுவாக்கிட உதவுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply