கறிவேப்பிலை சாதம்

Loading...

கறிவேப்பிலை சாதம்தேவையானப் பொருட்கள்:

அரிசி – 2 கப்
கறிவேப்பிலை – 1 கப்
தேங்காய் துருவல் – 1/2 கப்
கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
மிளகு – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிறு துண்டு
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்றவாறு

செய்முறை:

• அரிசியை வேகவைத்து, குழையாமல் உதிரியாக வடித்துக் கொள்ளவும்.

• ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, பெருங்காயம், கடலைப்பருப்பு, மிளகாய் அகியவற்றை சிவக்க வறுக்கவும். பின் அதில் மிளகு சேர்த்து, சிறிது வறுத்து, அதில் கறிவேப்பிலையைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பின் தேங்காய் துருவலைச் சேர்த்து சிறிது வதக்கி, இறக்கி வைக்கவும். ஆறியபின், மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.

• வாணலியில் நெய்யை விட்டு, கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவிப் போடவும். பின் சாதத்தைப் போட்டு லேசாகக் கிளறவும்.

• கடைசியாக கறிவேப்பிலைப்பொடி, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply