கர்ப்பிணிகள் ப்ளம்ஸ் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Loading...

கர்ப்பிணிகள் ப்ளம்ஸ் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!நீர்ச்சத்து அதிகரிக்கும்

கர்ப்பிணிகள் தங்களது உடலில் நீர்ச்சத்தின் அளவை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தண்ணீர் குடிப்பதுடன், அவ்வப்போது ப்ளம்ஸ் ஜூஸ் குடித்து வந்தால், உடலில் நீர்ச்சத்தின் அளவானது அதிகரிக்கும்.

ஆரோக்கியமான செரிமானம்

ப்ளம்ஸ் பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை எடுத்துக் கொண்டால், இது செரிமான பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் மலச்சிக்கலால் அவஸ்தைப்படும் கர்ப்பிணிகள் ப்ளம்ஸ் ஜூஸ் குடிப்பது நல்ல நிவாரணத்தைத் தரும்.

வைட்டமின்கள்

ப்ளம்ஸ் பழ ஜூஸில் வைட்டமின்கள் எண்ணற்ற அளவில் உள்ளன. அதிலும் வைட்டமின் ஏ, சி மற்றும் கே அதிகம் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஏ பார்வைக்கும், வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மற்றம் வைட்டமின் கே இரத்த உறைவு ஏற்படாமல் இருக்கும்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

கர்ப்ப காலத்தில் நோய்த்தொற்றுகளின் தாக்கத்தை தடுக்க வேண்டுமானால், ப்ளம்ஸ் ஜூஸ் குடியுங்கள். இது தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்ல பாதுகாப்பைக் கொடுக்கும். மேலும் இதில் இரும்புச்சத்து இருப்பதால், உடலில் இரும்புச்சத்தின் அளவை அதிகரிக்கும்.

மலச்சிக்கலைத் தடுக்கும்

நிறைய மக்கள் மலச்சிக்கல் இருக்கும் போது ப்ளம்ஸ் ஜூஸ் குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும் என்று சொல்வார்கள். அது கர்ப்பிணிகளுக்கும் பொருந்தும் என்பதால், இதனை கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply