கருத்தரிக்க விரும்பும் தம்பதியர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

Loading...

கருத்தரிக்க விரும்பும் தம்பதியர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைஆரோக்கியமான உணவு

கண்டிப்பாக ஆரோக்கிய உணவுகளை மட்டுமே உட்கொள்வது அவசியம். ஒருநாள் கூட தப்பித் தவறியும் துரித உணவுகளையோ, தேவையற்ற தின்பண்டங்களையோ எடுத்துக் கொள்ளதீர்கள். இது உங்களது உடல்நலத்தை பாதிக்கும்.

பைக் பயணம்

தவிர்த்திடுங்கள் கருத்தரிக்க விரும்பும் பெண்கள் பைக்கில் பயணம் செய்வதை முழுமையாக தவிர்த்துடுங்கள். பைக்கில் செல்லும் போது ஏற்படும் ஜெர்க்குகளால் கருவிற்கு அபாயம் ஏற்படலாம்.

வைட்டமின் மாத்திரைகள்

ஒருசில மாதங்களில் கருத்தரிக்க விரும்பும் தம்பதியர்கள் முக்கியமாக பின்பற்ற வேண்டிய விஷயம் இது. கருத்தரிக்க விரும்பும் பெண்கள் குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்னர் இருந்தே வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்வது நன்மை விளைவிக்கும். இது உங்களது உடல்திறனை அதிகரிக்க உதவும். எனவே, எளிதில் நீங்கள் கருத்தரிக்க இயலும்.

மருத்துவப் பரிசோதனை

கருத்தரிக்க விரும்பும் தம்பதியினர், குழந்தைப் பேறு பெற விரும்பும் முன்னர் தகுந்த மருத்துவரை அணுகி உடல்திறன் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. நமது தற்போதைய உணவுப்பழக்கம் பலவன கருத்தரிக்க தடையாய் இருக்கிறது.

எனவே, தயக்கம் இன்றி மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஒரு வேலை ஏதாவது பிரச்சனையாக இருந்தாலும் கூட, இன்றைய உயர்த்தர மருத்துவ முறையை கொண்டு தீர்வுக் கண்டுவிடலாம்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply