கத்திரிக்காயின் பலன்கள்

Loading...

கத்திரிக்காயின் பலன்கள்* கத்திரிக்காய் உடல் வலியைப் போக்கும் தன்மையுடையது. காய்ச்சலைப் போக்கக் கூடியது. சோர்வைப் போக்கக் கூடியது.

* வீக்கத்தைத் தணிக்கக் கூடியது. கொழுப்பைக் குறைக்கக் கூடியது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது. ரத்த அணுக்கள் சேர்க்கையைத் தடுக்கக் கூடியது. கண்களின் ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது.

* மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவல்லது, ஒவ்வாமையால் ஏற்படும் மயக்க நிலையைத் தடுக்க வல்லது, உறுப்புகளைத் தூண்ட வல்லது. 100 கிராம் கத்திரிக்காயில் 24 கலோரி மட்டுமே ஊட்டச்சத்து அடங்கி இருப்பதால் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள உதவுவதோடு ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்தைக் குறைக்கவும் இது மிகவும் உதவியாக உள்ளது.

* கத்திரி இலைகள் ஆஸ்த்துமா எனப்படும் இறைப்பு நோய், மூச்சுக் குழல் நோய்கள், சுவாச அறைக்கோளாறுகள், வலியுடன் சிறுநீர் வெளியேறுதல் ஆகியவற்றுக்கும் மருந்தாகிப் பயன் தருகின்றது. வாயில் எச்சில் சுரக்கவும் இது பயன்படுகிறது. கத்தரிச் செடியின் வேர் மூச்சிரைப்பு மற்றும் மூக்கில் தோன்றும் புண்களுக்கு மருந்தாகிறது.

* கத்தரிக்காயில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு மென்மையும், பலமும் தரவல்லது. கத்தரிக்காய் நார்ச்சத்து மிகுந்து உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கவல்லது மட்டுமின்றி சர்க்கரை நோயையும் தடுக்க வல்லது. கத்தரிக்காயை அரைத்து தீநீராக்கி வீக்கமுற்ற கால்களின் மீது தேய்த்துவர நாளடைவில் வீக்கம் குறைந்து விடும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply