கண்ணாடி அணிந்திருக்கும் பெண்களுக்கான சில மேக்-அப் டிப்ஸ்…

Loading...

கண்ணாடி அணிந்திருக்கும் பெண்களுக்கான சில மேக்-அப் டிப்ஸ்...கண்ணாடி என்பது உப்புக்கு சப்பாக இருப்பவர்கள் அணியும் ஒரு பொருள் கிடையாது. அது அவசியமான ஒரு பொருளாக மாறி விட்டது. கண்ணாடியின் ஃப்ரேம் சின்னதாக, சிக்கென, கவர்ச்சியாக வந்துவிட்டது. அதனால் கண்ணாடி அணியும் பெண்கள், அவர்களின் கண்களுக்கு மேக்-அப் போடுவது முக்கியமானதாக மாறிவிட்டது.

நீங்கள் காண்டாக்ட் லென்ஸை நிரந்தரமாக தூக்கி எரிந்து விட்டீர்களா அல்லது அதனை சீரான முறையில் அணிய சோம்பேறித்தனமாக உள்ளதா? எப்படி இருந்தாலும் அழகான கண்கள் வேண்டாம் என எந்த பெண்ணும் கூற மாட்டார்கள். அதற்கு காரணம் முகத்தின் அழகை மிகைப்படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது கண்கள்.

கண்ணாடி அணியும் பெண்கள் தங்கள் கண்களுக்கு எவ்வாறு மேக்-அப் போட வேண்டும் என்ற டிப்ஸ்கள் கூறப்பட்டுள்ளது. அவைகளைப் பின்பற்றி பயனைப் பெறுங்கள்.

1. நீங்கள் முதலில் ஆரம்பிக்க வேண்டியது உங்கள் புருவத்தில் இருந்து தான். உங்கள் புருவங்கள் சீர்படுத்தப்பட்டு உள்ளதா என்பதை கவனியுங்கள். உங்கள் கண்ணாடி உங்கள் புருவத்துடன் போட்டி போட வேண்டும் என்ற அவசியமில்லை. உங்கள் புருவங்களை சரியான அளவில் வைத்திட தொழில் ரீதியான வல்லுனரை சீரான முறையில் சந்தியுங்கள். இந்த வகையில், உங்கள் கண்களுக்கான மேக்-அப் அங்கீகரிக்கப்படும்.

2. நல்ல ப்ரைமரை பயன்படுத்த வேண்டும். இதனால் கண்ணாடி அணிந்திருக்கும் உங்களின் கண்கள், கறை மற்றும் இழுவுதல் இல்லாமல், சரியாக இருக்கும்.

3. கண் இமை ரோமங்களை சுருட்டி விடுங்கள். மஸ்காராவில் முதலீடு செய்ய வேண்டும் என்றில்லை. அடிப்படை கர்லர் ஒன்றே போதும் உங்கள் பணியை திறம்பட செய்து முடித்திட. இதனால் கண்ணாடி அணிந்திருக்கும் பெண்களின் கண்களுக்கான மேக்-அப் சிறப்பாக அமையும்.

4. முடிந்தால் ஐ-ஷேடோ போடுவதை தவிர்க்கவும். நாங்கள் அதை கண்டிப்பாக வேண்டாம் என்று தான் கூறுவோம். அதற்கு காரணம் அது உங்கள் கண்ணாடியின் பின்புறத்தை நசநசவென ஆக்கி விடும். கண்ணாடி அணிந்திருப்பவர்கள் தங்கள் கண்களுக்கு மேக்-அப் போடும் போது இதனை தவிர்க்க வேண்டும் இல்லையா?

5. நல்ல ஐ-லைனரை பயன்படுத்துங்கள். பூனை கண் வடிவம் அல்லது இறக்கை வடிவம் போன்ற பல விதமான வடிவங்களை முயற்சித்து பாருங்கள். கண்ணாடி அணிந்திருக்கும் உங்களுக்கு, அதில் ஏதாவது ஒன்று ஒத்துப்போய், உங்கள் கண்களுக்கு அழகு சேர்த்திடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply