கண்டறிந்து மாற்று (Find and Replace)

Loading...

கண்டறிந்து மாற்று (Find and Replace)வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு சொல் அல்லது சொல் தொடருக்குப் பதிலாக நாம் வேறு சொற்களை அல்லது சொல் தொடர்களை அமைக்கலாம். இதற்காக ஒவ்வொன்றாகத் தேடித் தேடி அமைக்க வேண்டிய தில்லை. இந்த தொகுப்பில் உள்ள Find and Replace டூல் இந்த செயலை மேற்கொள்ளும். ஆனால் இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. நாம் மாற்றி அமைக்க விரும்பும் டெக்ஸ்ட் 255 கேரக்டர்களுக்குள் இருக்க வேண்டும். இல்லையே சிக்கல் ஏற்படும். அல்லது ஏதேனும் கிராபிக் ஆப்ஜெக்டாக இருந்தாலும், இதன் மூலம் மேற்கொள்ள முடியாது. ஆனால் இந்த விதியை நாம் மாற்ற முடியும். அதற்கான வழியை இங்கு பார்க்கலாம்.
1. முதலில் எந்த டெக்ஸ்ட் அல்லது கிராபிக்ஸ் படத்தை மாற்ற வேண்டுமோ, அதனை காப்பி செய்து கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லுங்கள். காப்பி செய்தாலே அது கிளிப் போர்டில் அமர்ந்து கொள்ளுங்கள்.
2. அடுத்து எடிட் (Edit) மெனு செல்லுங்கள். வேர்ட் 97 மற்றும் பின்னர் வந்தவேர்ட் தொகுப்புகளில் Find and Replace பாக்ஸ் கிடைக்கும். அதற்கு முந்தைய தொகுப்புகளில் (இன்னும் நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தால்) ரீபிளேஸ் டயலாக் பாக்ஸ் தனியே கிடைக்கும்.
3. Find What பாக்ஸில், எந்த டெக்ஸ்ட்டின் இடத்தில் நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட் அல்லது படத்தை ரீபிளேஸ் செய்திட வேண்டும் என்பதனை அமைத்திடுங்கள்.
4. அடுத்து Replace With பாக்ஸில் ^c அழுத்துங்கள். இந்த கட்டளை வேர்டுக்கு கிளிப் போர்டில் உள்ளதை இங்கு கொண்டு வா என்று சொல் கிறது.
5. அடுத்து Find Next என்பதில் கிளிக் செய்தி டவும்.
இப்படி யே நீங்கள் விரும்பிய வகையில் ரீபிளேஸ் செய்திடலம.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply