ஓமு ரைஸ்

Loading...

ஓமு ரைஸ்வடித்த சாதம் – ஒரு கப்
குடைமிளகாய் – 1/4
வெங்காயம் – 1/4
மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
வேக வைத்த மக்காச்சோளம் – ஒரு தேக்கரண்டி
தக்காளி ஸாஸ் – 4 தேக்கரண்டி
முட்டை – 2
உப்பு, எண்ணெய் – தாளிக்க மற்றும் ஆம்லெட் போட

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். குடைமிளகாயை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம், குடைமிளகாய் போட்டு வதக்கவும்.

வெங்காயம், குடைமிளகாய் வதங்கியதும் அதனுடன் சாதம், மிளகுத் தூள் சேர்த்து கிளறி விடவும்.

அதன் பின்னர் தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

பிறகு அதில் மக்காச்சோளத்தை சேர்த்து கலந்து விடவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல் அல்லது அகலமான தவாவை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அடித்து வைத்துள்ள முட்டையை அகலமான ஆம்லெட்டாக ஊற்றவும்.

இரண்டு நிமிடம் கழித்து ஆம்லெட் வெந்ததும் செய்து வைத்திருக்கும் ப்ரைட் ரைஸை ஆம்லெட்டின் நடுவில் வைக்கவும்.

பின்னர் ஆம்லெட்டின் இரண்டு பக்கங்களை உட்புறமாக படத்தில் உள்ளது போல் மடிக்கவும். ஓமு ரைஸ் தயார்.

பரிமாறும் தட்டினை ஓமு ரைஸின் மீது கவித்து வைக்கவும்.

தவாவினை தலைக்கீழாக கவிழ்த்து திருப்பி வைத்து ஓமுரைஸினை தட்டில் எடுத்துக் கொள்ளவும்.

பரிமாறும் தட்டில் ஓமுரைஸினை வைத்த பிறகு விருப்பத்திற்கு ஏற்றவாறு தக்காளி சாஸைக் கொண்டு அலங்கரிக்கவும். குழந்தைகளுக்கு பரிமாறும் போது சின்ன சின்ன கார்ட்டூன்ஸ் அல்லது ஏதேனும் எழுத்துக்களால் அலங்கரிக்கலாம்.

சுவையான வித்தியாசமான ஓமுரைஸ் தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply