ஒரே பிரசன்டேஷனில் பல ஸ்லைட் டிசைன்ஸ்

Loading...

ஒரே பிரசன்டேஷனில் பல ஸ்லைட் டிசைன்ஸ்ஒரு பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் பலர் ஒரே ஒரு ஸ்லைட் டிசைனை மட்டுமே கையாள்வார்கள். ஸ்லைடில் காட்டப்படும் விபரங்கள் முற்றிலும் மாறினாலும் அனைத்து ஒரே வகை ஸ்லைட் டிசைனிலேயே இருக்கும். ஏனென்றால் ஒரே ஸ்லைட் டிசைன்தான் ஒரு பிரசன்டேஷன் பைலில் வர முடியும் என இவர்கள் நம்புவதே இதற்குக் காரணம். வெவ்வேறு ஸ்லைட் பிரசன்டேஷனை ஒரு பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் கொண்டு வர முடியும். அதற்கான வழிகளை இங்கு காண்போம்.

மிகப் பெரிய அளவில் அதிக எண்ணிக்கையுள்ள ஸ்லைடுகளைக் கொண்டு பிரசன்டேஷன் பைல்களைத் தயாரிப்பவர்களுக்கு இந்த உதவியாக இருக்கும். ஸ்லைட் டிசைனை மாற்றுவதால் அதன் மூலம் சொல்லப்படும் கருத்து அல்லது தகவல் மாறியுள்ளது என்று காட்சி மாறுவதன் மூலம் சொல்ல முடிகிறது. இதற்காக நாம் ஒவ்வொரு ஸ்லைடிற்கும் ஒரு டிசைனை அமைக்கப்போவதில்லை. பல பிரிவுகளில் கருத்து சொல்ல இந்த டிசைன் மாற்றம் உதவும். முதலில் நார்மல் வியூவினை குறிப்பிட்ட பைலுக்குத் தேர்ந்தெடுங்கள். View மெனு சென்று Normal என்னும் பிரிவில் கிளிக் செய்திடுங்கள். முதலில் Slide Design Task Pane என்னும் பிரிவிற்குச் செல்லுங்கள். இதற்கு Format மெனு சென்று Slide Design என்பதனைத் தேர்ந்தெடுங்கள். இந்த புரோகிராம் விண்டோவின் இடது பக்கம் Slides tab என்று ஒரு பிரிவு இருக்கும். இப்போது நீங்கள் புதிய ஸ்லைட் டிசைன் எந்த ஸ்லைடுகளுக்கெல்லாம் அமைக்கப்பட வேண்டும் என விரும்புகிறோமோ அவற்றை Shift / Ctrl கீகளை அழுத்தியவாறே தேர்ந்தெடுக்கவும். பின்னர் எந்த ஸ்லைட் டிசைன் டெம்ப்ளேட் உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ அதனை ஸ்லைட் டிசைன் டாஸ்க் பேன் பிரிவில் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேர்ந்தெடுக்கையில் அருகில் உள்ள கீழ் நோக்கிக் காணப்படும் சிறிய அம்புக் குறியில் அழுத்தவும். கிடைக்கும் மெனுவில் Apply to Selected Slide என்பதில் கிளிக் செய்திடவும். புதிய ஸ்லைட் டிசைன் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஸ்லைடுகளுக்கு மட்டும் இணைக்கப்பட்டு மற்றவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டப்படும்.

யு.எஸ்.பி. போர்ட்டுகளுக்கிடையே என்ன வேறுபாடு?

யுஎஸ்.பி. போர்ட்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் யு.எஸ்.பி.2 என்றும் யு.எஸ்.பி. 1 என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த இரண்டிற்கும் இடையே என்ன வேறுபாடு? சாப்ட்வேர் புரோகிராம்களைப் போல பதிப்பில் வேறுபாடா? அல்லது இவை இரண்டும் வெவ்வேறானவையா? இப்போது யு.எஸ்.பி. போர்ட் 1 என்பதே கிடையாது. பழைய கம்ப்யூட்டர்களில் தான் இது காணப்படுகிறது. இருப்பினும் வேறுபாட்டினைத் தெரிந்து கொள்ளலாம்.

அடிப்படை வேறுபாடு இவை இரண்டும் இயங்கும் வேகத்தில் தான் உள்ளது. யு.எஸ்.பி. 2 என்பது யு.எஸ்.பி.1 மற்றும் 1.1 போர்ட்களைக் காட்டிலும் வேகமானவை. யு.எஸ்.பி. 2 விநாடிக்கு 480 மெகா பிட்ஸ் வேகத்தில் டேட்டாவினைப் பரிமாறுகிறது. ஆனால் யு.எஸ்.பி. 1 மற்றும் 1.1. விநாடிக்கு 12 மெகா பிட்ஸ் வேகத்தில் தான் பரிமாறும். இரண்டிற்கும் இடையே தகவல்களைப் பரிமாறும் வேகத்தில் 400 மடங்கு வித்தியாசம் உள்ளது.

யு.எஸ்.பி. 1 வழி full speed என அழைக்கப்படுகிறது. யு.எஸ்.பி. 2 Hispeed என குறிக்கப்படுகிறது. சரி, இவை இரண்டும் எப்படி இணைந்து செயல்படுகின்றன. இந்த இரண்டுமே தன்னைக் காட்டிலும் குறைந்தோ அல்லது கூடுதலாக வேகத்தில் இயங்கும் டிரைவ்களுடன் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றை இணைத்தோ அல்லது மாற்றி மாற்றியோ பயன்படுத்துவதில் ஒன்றும் பிரச்னை வராது. உங்களுடைய கம்ப்யூட்டர் சிஸ்டம் சரியாக இயங்கும் வரை இந்த இரண்டையும் கலந்து பயன்படுத்தலாம்.

8 ஜிபி கொள்ளளவில் ஜெட்பிளாஷ் 110

ட்ரான்ஸென்ட் நிறுவனம் 8 ஜிபி அளவிலான ஜெட்பிளாஷ் 110 பென் டிரைவினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 64 து 21 து 10 என்ற அளவில் அமைந்துள்ள இதன் வடிவம் அனைத்து வகையிலும் பாதுகாப்பாக அமைந்துள்ளது. இதில் தனியாக மூடி என எதுவும் கிடையாது.

இணைக்கும் பகுதியை உள்ளிழுத்துக் கொள்ளலாம். நீட்டி வைத்து கொள்ளும் வகையில் லாக் தரப் பட்டுள்ளது. இதில் பலவகையான சாப்ட்வேர் புரோகிராம்கள் பல: வெப்சைட் ஆட்டோ லாக் இன், பெர்சனல் கம்ப்யூட்டர் லாக், யாரும் அறிந்து கொள்ள இயலாத வகையில் மொபைல் பேவரைட்ஸ், ரகசியமாக ஸிப் என்கிரிப்ஷன், மொபைல் இ–மெயில், டேட்டா பேக் அப் மற்றும் ஆன்லைன் அப்டேட் என ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரில் தரப்படும் டேட்டா செக்யூரிட்டி அனைத்தும் தரப்பட்டுள்ளன.
விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ், எம்.இ., எக்ஸ்பி, மேக் மற்றும் லினக்ஸ் ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பயன் படுத்தலாம். இந்த 8 ஜிபி பிளாஷ் டிரைவின் விலை ரூ.6,000. மூன்று ஆண்டு கால வாரண்டியுடன் கிடைக்கிறது. இந்த டிரைவ் 512 எம்பி,1ஜிபி, 2 ஜிபி மற்றும் 4 ஜிபி அளவுகளில் கிடைக்கிறது.

Loading...
Rates : 0
VTST BN