ஐஸ் கட்டியால் சருமத்திற்கு கிடைக்கும் சில அழகு ரகசியங்கள்!!!

Loading...

ஐஸ் கட்டியால் சருமத்திற்கு கிடைக்கும் சில அழகு ரகசியங்கள்!!!மென்மையான சருமம்

சரும ஐசிங் உங்கள் முகத்தை பதனிடப்படுத்தும். இதனால் சருமத்தின் தோற்றம் மென்மையாகும். குப்பைகள் மற்றும் அதிகமான சரும மெழுகால் பெரிதாக இருக்கும் துவாரங்களின் அடைப்பை நீக்க உதவுவதால், மேலும் பெரிதாக உள்ள துவாரங்களை குறைக்கவும், இறுக்கவும் இது உதவும்.

சரும பதனிடுதல்

மேக்-அப் போடுவதற்கு முன் முதலில் ஐஸ் கட்டியை கொண்டு முகத்தில் தடவவும். அதன் பின்னரே பிரைமரைத் தடவ வேண்டும். இது மலிவான சரும பதனிடுதலாக செயல்படும். மேக்-கப்பிற்கு கீழ் உள்ள மிகப்பெரிய துவாரங்களின் தோற்றங்களை இது குறைக்கும். இதனால் ஃபவுண்டேஷன் மென்மையாகவும் குறைபாடற்றதாகவும் இருக்கும்.

இரத்த ஓட்டம் மேம்படும்

ஐஸ் கட்டி என்பது உங்கள் சருமத்தின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். குளிர்ச்சி உங்கள் இரத்த குழாய்களை சுருங்க செய்யும். அதனால் சரும மேற்பரப்பிற்கு குறைந்த அளவிலேயே தான் இரத்தம் செல்லும் இது வீக்கம் அல்லது அலர்ஜியை குறைக்கும்).பின் மெதுவாக அந்த பகுதிகளுக்கு வெப்பமான இரத்தம் பாய்ந்தோடும்

.
கண் அழகு

ஐஸ் தடவுவதால் கண்களுக்கு கீழ் ஏற்படும் வீக்கம் குறையும்.

சிவப்பாதல் கட்டுப்பாட்டில் இருக்கும்

ஐஸ் தடவுவதால் பருக்களினால் சருமம் சிவப்படைதல் குறையும். எரிச்சல் ஏற்படுத்தும் சருமத்திற்கும் இதமளிக்கும். பரு வர தொடங்கினாலே அதன் மீது ஐஸ் கட்டி வைத்து தடவினால் அலர்ஜி குறையும். இதனால் சிவப்பாதலின் அளவும் எண்ணிக்கையும் குறையும். பருக்களின் மீது ஐஸ் கட்டியை வைக்கவும். அந்த இடம் மரத்து போகும் வரை சில நொடிகளுக்கு அப்படியே வைத்திருக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply