ஏழைகளின் ஆப்பிள் “நெல்லிக்காயின்” மருத்துவ பலன்கள்

Loading...

ஏழைகளின் ஆப்பிள் “நெல்லிக்காயின்” மருத்துவ பலன்கள்இயற்கையின் கொடையான நெல்லிக்காயில் வேறெந்த கனிகளிலும் இல்லாத அளவுக்கு அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது.
தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்பது பழமொழி, மூன்று நெல்லிக்காயில் ஒரு ஆப்பிளுக்கு இணையான சத்துக்கள் உள்ளது. எனவே ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படுகிறது.

நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது.

நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸானது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம்.

ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும்.

* தலைமுடி கருத்து நீண்டு வளர உதவுகிறது.

* இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

* கல்லீரல் வேலை செய்ய உதவுகிறது.

* ஞாபக சக்தியை அதிகரிக்கப் பயன்படுகிறது.

* இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.

* நகம், பல் ஆகியவற்றை பலப்படுத்துகிறது.

* முகச்சுருக்கத்தைக் குறைத்து இளமைத்தோற்றத்தைத் தருகிறது.

* இன்சுலின் சுரப்பை அதிகரித்து இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக் குறைக்கிறது. இதன் மூலம் நீரழிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

Loading...
Rates : 0
VTST BN