ஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையை குறைக்க ஆசையா? | Tamil Serial Today Org

ஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையை குறைக்க ஆசையா?

Loading...

ஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையை குறைக்க ஆசையாஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையை குறைக்க ஆசையா? அது நடக்காது என்று பலர் நினைப்பதுண்டு.
ஆனால் சரியான டயட்டை மேற்கொள்வதன் மூலம் நிச்சயம் ஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையைக் குறைக்கலாம். அதிலும் பலர் இந்த புத்தாண்டில் இருந்து, உடல் எடையை குறைத்து, சிக்கென்று வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதுண்டு. அதற்காக என்ன செய்யலாம் என்று யோசிப்பதுண்டு. அப்படி நீங்கள் உடல் எடையைக் குறைக்க என்ன செய்ய வேண்டுமென்று யோசித்தால், தமிழ் போல்ட் ஸ்கை அட்டகாசமான டயட் டிப்ஸ்களை கொடுத்துள்ளது. அதனைப் படித்து, அதன் படி நடந்தால், நிச்சயம் ஏழு நாட்களில் ஏழு கிலோ உடல் எடையைக் குறைக்கலாம்.
இந்த மாதிரி எத்தனையோ உடல் எடை குறைப்பு வழிமுறைகளைப் படித்து பின்பற்றி, அதனால் சிலருக்கு எந்த பலனும் கிடைத்திருக்காமல் இருக்கலாம். ஆனால் இங்கு குறிப்பிட்டிருப்பது போல் நடந்தால், நிச்சயம் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும். முக்கியமாக எப்போதும் உடல் எடையை குறைக்க எந்த ஒரு முயற்சியை மேற்கொள்ளும் போதும், அதன் மீது முதலில் மனதில் நம்பிக்கை கொண்டு முயற்சித்தால், நிச்சயம் அதன் பலனைப் பெற முடியும். என்ன நண்பர்களே! ஏழு நாட்களில் ஏழு கிலோ உடல் எடையை குறைக்க ரெடியா!

ஏழு நாட்களில் உடல் எடையை குறைக்க முயலும் போது, முதல் நாளை ஆரோக்கியமாக தொடங்க வேண்டும். அதற்கு அந்நாள் முழுவதும் பழங்களை மட்டும் தான் சாப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும், பழங்களைத் தவிர வேறு எதையும் உட்கொள்ளக் கூடாது. அதிலும் வாழைப்பழத்தை தவிர வேறு எந்த ஒரு பழத்தையும் பயமின்றி சாப்பிடலாம். அதற்காக தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டாம். தண்ணீர் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு குடிக்கலாம்.

இரண்டாம் நாள் முழுவதும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் காய்கறிகளை வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சாலட் செய்து சாப்பிட்டு வர வேண்டும். ஏன் உங்களுக்குப் பிடித்த உருளைக்கிழங்கைக் கூட பயமின்றி சாப்பிடலாம். குறிப்பாக இப்படி செய்யும் போது, மறக்காமல் 8 டம்ளர் தண்ணீரையும் குடித்து வாருங்கள்.

Loading...
Rates : 0
VTST BN