எலுமிச்சையின் பயன்கள்.

Loading...

எலுமிச்சையின் பயன்கள்.எலுமிச்சையானது, தெற்காசியாவிலும், தென் கிழக்காசியாவிலும் தொற்று நீக்கியாகவும், நஞ்சு முறிப்பு மருந்தாகவும் பயன்பட்டு வருகிறது. எலுமிச்சை பழத்தில், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. இதை உணவில் அதிகம் சேர்த்தால், மிகப்பெரிய பிரச்னையைக் கூட எளிதில் தீர்க்கமுடியும். உடல் பருமன், தொண்டைப்புண் மற்றும் முகப்பரு போன்ற பிரச்னைகளைப் போக்கும்.

* தினமும் காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து, தேன் சேர்த்து குடித்து வந்தால், குடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும்.

* எலுமிச்சை ஜூஸில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் குணமாகும்.

* தினமும் உடற்பயிற்சிக்கு பின், ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றை குடிப்பது சிறந்த பலனைத் தரும்.

* தினமும் எலுமிச்சை ஜூஸ் குடித்தால், புற்றுநோய் அபாயத்திலிருந்து விடுபடலாம். உடலில் சோர்வு மற்றும் மன அழுத்தம் காரணமாக வரும் தலைவலியைப் போக்க, எலுமிச்சை டீ மிகவும் சிறந்தது.

* குழந்தைகளின் வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களை வெளியேற்றுவதற்கு எலுமிச்சை பயன்படுகிறது.

* உடலில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால், அந்த இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றினை தடவினால், காயங்கள் எளிதில் குணமாகிவிடும். சரும பராமரிப்பில் எலுமிச்சை அதிகம் சேர்க்கப்படுகிறது. எலுமிச்சையை தினமும் உணவில் சேர்த்தால், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். எலுமிச்சம் பழத்தில் சிட்ரிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. எலுமிச்சையில் எண்ணற்ற மருத்துவ குணாதிசயங்கள் உள்ளதால், தினமும் பயன்படுத்துவோம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply