உதடு வெடிப்பு அதிகமா இருக்கா? தேங்காய் எண்ணெய் யூஸ் பண்ணுங்க…

Loading...

உதடு வெடிப்பு அதிகமா இருக்கா  தேங்காய் எண்ணெய் யூஸ் பண்ணுங்க...உதடு வெடிப்பு ஏற்பட காரணங்கள்

உங்கள் உதடுகள் வறண்டு போக தொடங்கினால், அதற்கு ஈரப்பதத்தை அளிக்கும் நேரம் வந்து விட்டது என அர்த்தமாகும். உதட்டில் வெடிப்புகள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. முக்கியமான காரணமாக அமைவது வெப்பநிலை மாற்றங்கள் அல்லது உதட்டை அதிகமாக நக்குவதே.

கடையில் வாங்கப்பட்ட பல்வேறு வகையான ஃபேன்ஸி உதடு பாம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, உங்கள் உதட்டிற்கு ஈரப்பதத்தை உண்டாக்க இயற்கையான வழியில் கிடைக்கும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துங்கள்.

தேங்காய் எண்ணெய் ஸ்கரப்

1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் 1 டீஸ்பூன் உப்பை கலந்து ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொண்டு இந்த ஸ்க்ரப்பை தயாரிக்கலாம். பஞ்சுருண்டையை கொண்டு இந்த கலவையை உங்கள் உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். பின் உதட்டின் மீது விரல்களை கொண்டு வட்ட வடிவில் ஒரு நிமிடத்திற்கு மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.

வெறும் தேங்காய் எண்ணெய்

சில துளி எண்ணெய்யை உங்கள் உள்ளங்கையில் ஊற்றி, அதை உங்கள் விரலை கொண்டு தொட்டு எடுங்கள். உதட்டின் மீது கொஞ்சமாக அதை தடவவும். பின் மெதுவாக மசாஜ் செய்யவும். ஒரு நாளில் இதனை எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply