உதடு பராமரிக்கும் முறை

Loading...

உதடு பராமரிக்கும் முறைஉதடு
உடலில் வியர்க்காத பகுதி எது என்றால் அது உதடுதான். முகத்தை அழகாய்க் காட்டி, வனப்பைக் கூட்டுவதில் உதட்டுக்கு முக்கியப் பங்கு உண்டு. உதடுகளில் வறட்சி, கருத்துப் போதல், ஈரப்பசை இன்மை போன்ற காரணங்களால் உதட்டின் அழகு கெடும்.
தரமற்ற லிப்ஸ்டிக் பயன்படுத்தும்போது தோல் கருப்பாக வாய்ப்பு அதிகம். வேதிப்பொருட்கள் கலந்த பழச்சாறு குடிப்பதாலும் சில வகைப் பழங்கள், கொட்டைகளின் சாறு உதட்டில் படுவதாலும் வைட்டமின் பி குறைபாட்டினாலும் உதடு புண்ணாகி, அந்த இடம் கருத்துப் போகலாம். புண் இருந்தால், தினமும் தேங்காய் எண்ணெய் அல்லது பாரஃபின் தடவினால் புண்கள் விரைவாக ஆறும்.
பல் துலக்கும்போதும், முகத்துக்கு ஸ்க்ரப்பிங் செய்யும்போதும், உதடுகளை லேசாகத் தடவிவிட்டால், உதட்டில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி வழவழப்பாக இருக்கும்.
செக்கச் சிவந்த உதடு
பன்னீர் ரோஜாவின் சாறு அல்லது பன்னீரும்கூட உதட்டுக்கு நல்ல நிறம் கொடுக்கும். தயிர், பாலாடையையும் உபயோகிக்கலாம். உதட்டில் தேன் தடவுவதன் மூலம், வறட்சி நீங்கி, பளிச்சிட வைக்கும். உலர் திராட்சையின் தோலை உரித்து, உதட்டின் மேல் தடவிவர, உதட்டில் பளபளப்புக் கூடும்.
மசாஜ்
ஆங்கில உயிரெழுத்துகளான கிணிமிளிஹி ஆகியவற்றை 10 நிமிடங்கள் தொடர்ந்து மெதுவாகச் சொல்லிக்கொண்டிருப்பது உதட்டுக்கு நல்ல பயிற்சி. லிப்ஸ்டிக் இடுவதுபோல், விரலால் மேல் உதட்டின் ஓரங்களிலிருந்து மசாஜ் செய்தபடி நடுவிலும் கீழ் உதட்டில் நடுவிலிருந்து மசாஜ் செய்து ஓரங்களிலும் கொண்டுவர வேண்டும். இதனால் உதடுகள் புத்துணர்வு அடையும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply