உதடுகளை பாதுகாக்கும் வழிகள்!!

Loading...

உதடுகளை பாதுகாக்கும் வழிகள்!!* முகத்திலேயே மிகவும் மென்மையான தோல் உதடுகளில்தான் உள்ளது. அதனால், எளிதில் வெடிப்பு, ரத்தம் வடிதல், சிவப்பு நிறமாதல் ஏற்படும். உதடுகளில் பாதுகாப்பு படலங்களான வியர்வை சுரப்பி, முடி கிடையாது. சுவாசிக்கும்போது, வாயைவிட மூக்கால் சுவாசிப்பது நல்லது.

* சரும வறட்சியால்தான் உதடுகள் வெடிக்கும்.நிறைய நீர் அருந்துவது நல்லது.

* உதடுகளைச் சுற்றி வெடிப்பு ஏற்பட்டால், வைட்டமின்-பி2 குறைவு என அர்த்தம்.

* பி-2 சத்துள்ள காய்கறிகள் , உணவுகளை போதுமான அளவில் சாப்பிட வேண்டும்.

* பயன்படுத்தும் , லிப் பாம்களில், வெண்ணெய், வைட்டமின்-இ அதிகம் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது.

* புகை பிடிப்பதால், உதட்டில் சுக்கங்கள் தோன்றும். மது அருந்துவதால், அதிக வறட்சி ஏற்பட்டு, எரிச்சல் உண்டாகும்.

* சருமத்தின் ஈரப் பதத்தை பராமரிப்பதில், தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்காக நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும்.என்ற அவசியம் இல்லை. அதிகளவில் பழங்கள், காய்கறிகள் சேர்த்துக்கொண்டால், நம் உடலின்செயல்பாடடிற்கான தண்ணீரை அது வழங்கிவிடும்.

* உப்பு சேர்க்காத, தேங்காயெண்ணெய் உதட்டில் தடவலாம்.

* சுத்தமான பன்னீரை பஞ்சில் நனைத்து, உதட்டின் மீது அரை மணி நேரம் வைக்கவும். தொடர்ச்சியாக செய்யும்போது, வெடிப்புகள் குணமாகும். கருப்பு நிறம் மறைந்து, இயற்கையான நிறம் மீட்கப்படும்.

* லிப்ஸ்டிக் போடுவதைக் குறைத்துக்கொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply