உதடுகளைப் பராமரிக்கும் வழிகள்

Loading...

உதடுகளைப் பராமரிக்கும் வழிகள்உதடுகள் வறட்சியாவதற்கு கால நிலை ஒரு காரணமாக இருந்தாலும், நாம் குடிக்கும் பானங்களான சூடான டீ மற்றும் காபியும் மற்றொரு காரணமாக உள்ளன. இவை உதடுகளில் உள்ள ஈரப் பசையைப் போக்குவதுடன் உதடுகளை மென்மையிழக்கச் செய்து கருமையாக மாற்றுகின்றன.காபி, டீ போன்றவற்றை மிகவும் சூடாக குடிக்காமல், சிறிது குளிரவைத்துக் குடித்தால், உதடுகளுக்கு மிகவும் நல்லது. உதடுகள் எப்போதும் மென்மையாகவும் அழகாகவும் இருக்க சில வழிகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.
* லிப் பாம் உபயோகிப்பதற்கு பதிலாக தேனை உபயோகிக்கலாம். தேனில் சருமத்தில் ஈரப் பசையைத் தக்கவைக்கும் சக்தி இருப்பதால், அவை உதடுகளை மென்மையாக வைத்துக்கொள்ள உதவும். அதற்கு சிறிது தேனை எடுத்து உதடுகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊறவைத்திருந்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இதனைத் தொடர்ந்து தினமும் செய்து வந்தால், உதட்டின் ஈரப்பதம் குறையாமல் அப்படியே இருக்கும்.
* ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாகக் கலந்து தினமும் இரவில் படுக்கும்போது உதடுகளுக்கு தடவி வந்தால், ஒரு வாரத்தில் உதடுகளில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
* வெள்ளரிக்காய்த் துண்டுகளை உதடுகளின் மேல் வைத்து 15 நிமிடம் ஊறவைத்து வந்தால், அவை உதடுகளுக்கு ஈரப் பசையைத் தருவதுடன், உதடுகளில் உள்ள கருமையை மறையச் செய்யும்.
* மில்க் க்ரீம் உதடுகளை ஈரப் பதத்துடனும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ளும். அதற்கு மில்க் க்ரீமை உதடுகளில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை தினமும் செய்து வந்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply