உணவுகளை மீண்டும் சூடேற்றினால் ஏற்படும் விளைவுகள் என்ன? | Tamil Serial Today Org

உணவுகளை மீண்டும் சூடேற்றினால் ஏற்படும் விளைவுகள் என்ன?

Loading...

உணவுகளை மீண்டும் சூடேற்றினால் ஏற்படும் விளைவுகள் என்னநாம் சாப்பிட்டு முடித்த பின்னர் மிஞ்சிய உணவுகளை பத்திரமாக எடுத்து வைக்கிறோம்.
அந்த மிஞ்சிய உணவுகளை சாப்பிடும்போது, மீண்டும் அதனை சூடாக்கி எடுத்துக்கொள்கிறோம், ஆனால் எல்லாவகை உணவுகளையும் இவ்வாறு மீண்டும் சூடேற்றுவது சில ஆரோக்கிய கெடுதல்களை விளைவிக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் ஊட்டச்சத்துக்கள் மிக உயர்ந்த அளவில் உள்ளது. ஆனால் அதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு அதனை மீண்டும் எடுத்து சூடேற்றும்போது அதன் ஊட்டச்சத்துக்களை இழந்துவிடும்.

கோழிக்கறி

கோழிக்கறியில் புரதம் அதிகம் உள்ளதால், இதனை மீண்டும் சுட வைக்கும் போது நமக்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அப்படி உண்ண வேண்டுமானால், அதை அப்படியே குளிர்ச்சியாகவே உண்ணுங்கள்.

காளான்

காளான்களைப் பொறுத்தவரை அதனை தயார் செய்த உடனேயே சாப்பிட்டு விட வேண்டும். அதனை ஆற போட்டு விட்டால், அதிலுள்ள புரதத்தின் அளவுகளில் மாற்றம் ஏற்படும். இதனால் செரிமானமாக கஷ்டமாக இருக்கும்.

பீட்ரூட்

பீட்ரூட்டில் நைட்ரேட்டின் அளவு அதிகமாக உள்ளதால் தான், அது நல்லதாக கருதப்படுகிறது. ஆனால் அதையே மீண்டும் சுட வைக்கும் போது, அது பலனளிக்காமல் போய் விடுகிறது.

கீரைகள்

கீரைகளை மீண்டும் சுட வைப்பதும் கூட ஆபத்தானதே. கீரைகளிலும் நைட்ரேட்டின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அதனை மீண்டும் சுட வைக்கும் போது, ஒட்டு மொத்த கீரை முழுவதுமே 100% நைட்ரேட்டாக மாறிவிடும். இது உடலுக்கு புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.

Loading...
Rates : 0
VTST BN