உடல் துர்நாற்றத்தை விரட்டுவது எப்படி!!

Loading...

உடல் துர்நாற்றத்தை விரட்டுவது எப்படி!!தவிர்க்க வேண்டிய உணவுகள்

சில விஷயங்களை நீங்கள் கடைப்பிடிப்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை.

பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை அதிகமாக உண்ணுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

இவை சருமத் துவாரங்கள் வழியாக தேவையற்ற துர்நாற்றத்தைப் பரப்பும். வெங்காயத்தை நீங்கள் என்ன தான் வாசனைப் பொருட்கள் சேர்த்து சமைத்தாலும், அவற்றை சற்று விலக்கியே வைப்பது நல்லது.

இருமுறை குளியுங்கள்

அவ்வப்போது பாத்ரூம் போங்க… ஆமாங்க தொடர்ந்து குளியுங்க. வெயில் அதிகம் இருக்கும் நேரங்களில் ஒரு நாளைக்கு இருமுறை குளிப்பது சிறந்தது. இது உங்களின் பல பிரச்சனைகளை தீர்த்து வைக்கும்.

டால்கம் பவுடர்

இன்றைக்கு இந்த விஷயம் மிகவும் குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றாக உள்ளது. ஆனால் இது மிகவும் பலன் தரக்கூடிய ஒன்று. பவுடர் உங்களை வெயில் காலங்களில் புத்துணர்ச்சியுடன் வைப்பதுடன், உங்கள் உடல் நாற்றத்தை குறைக்கவும் உதவும்.

டியோடரண்ட்

வியர்வையை கட்டுப்படுத்தும் டியோடரண்ட்டை உபயோகியுங்கள். இது உங்களை புத்துணர்வு மணத்துடன் வைப்பது மட்டுமல்லாமல், உங்களின் வியர்வையையும் கட்டுக்குள் வைக்கும். வெயில் காலங்களில் உங்களுக்கு அதிகமாக வியர்ப்பதால், உங்கள் உடலில் வாடை வீசும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply