உடற்பயிற்சி செய்யும்போது இதை நியாபகம் வச்சுகோங்க!

Loading...

உடற்பயிற்சி செய்யும்போது இதை நியாபகம் வச்சுகோங்க!* வயிறு முடட் சாப்பிட்டால், 2 மணி நேரத்துக்குப் பிறகுதான் உடற்பயிற்சியில் ஈடுபடவேண்டும்.ஸ்னாக்ஸ் சாப்பிட்ட பிறகு , 20 நிமிடங்கள் கழித்து உடற்பயிற்சி செய்யலாம்.

* நன்றாக பயிற்சி செய்தால், நன்றாகப் பசிக்கும்.சத்தான உணவுகளை சாப்பிட்டால், உடல் அதைக் கிரகித்துக்கொள்ளும். உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். மன அழுத்தம் வராது. எந்த வேலையையும் திறமையாக செய்து முடிக்கும் ஆற்றல் வளரும்.பெண்களுக்கு உடலை இந்த வயதிலிருந்தே ஆரோக்கியமாக வைத்திருந்தால், திருமணத்துக்குப் பின் சிசேரியன் தவிர்த்து சுகப் பிரசவம் சாத்தியமாகும்.

* ஒர்க் அவுட் செய்யும் ஆர்வத்தில் அதிகப்படியாகவும் செய்துவிடக்கூடாது.அது தசைப் பிரச்சினை, உடல்வலி போன்றவற்றுக்குக் காரணமாகிவிடும்.

* வயதான காலத்தில் உடல் பேலன்ஸ் இழந்து தடுமாறும்.இந்த வயதில் பயிற்சிகளை செய்து வந்தால்,தெம்பாக இருக்கலாம்.

* 24 மணி நேரத்தில் எந்த நேரமும் பயிற்சிகளை செய்யலாம்.

* எடை குறையவேண்டும் என்று நினைத்துப் பயிற்சி செய்பவர்களுக்கு காலை நேரமே உகந்தது.

* வெறும் வயிற்றில் பயிற்சி செய்யும்போது, கொழுப்பு நன்றாகக் கரையும் என்ற நம்பிக்கை உள்ளது. இது தவறு. பயிற்சிக்கு முன்பு பழங்கள் அல்லது சிறிதளவு சிற்றுண்டி உட்கொள்வது நல்லது.

* தினம் பயிற்சி செய்தால், ஒரு மாதத்தில் அரை கிலோ எடையைக் குறைக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply