உடம்பு சூடா இருக்கா? தணிக்க வழி பாருங்க

Loading...

உடம்பு சூடா இருக்கா  தணிக்க வழி பாருங்கநீங்கள் கல்லூரி மாணவரா… உங்களுக்கு முகத்தில் பரு இருக்கிறதா? பருவக்கோளாறு என்று சொல்லலாம். அதையும் தாண்டி ஒரு காரணம் இருக்கிறது; உங்கள் உடல் சூடானதாக இருக்கலாம். இது தான் பருவுக்கு காரணமாக இருக்கலாம். இதுபோல, நடுத்தர வயதினர் வரை சிலருக்கு , சுற்றுலா சென்று திரும்பிய பின்போ, வேறு சில சூழ்நிலைகளிலோ அஜீரணம் ஏற்படும். வேறு என்ன காரணமோ என்று பயப்பட வேண்டாம். இதற்கும் உடல் சூடுதான் காரணம். ஏன், தீபாவளிக்காக அலைச்சல் இருக்கலாம்; மூக்கை பிடிக்க ஒரு பிடி பிடித்திருக்கலாம் இல்லையா? அதுவும் ஒரு காரணம் தான்.
காய்ச்சல் வருவது வேறு; அதற்கு சில காரணங்கள் உண்டு. ஆனால், பொதுவாகவே, வழக்கமான சில சூழ்நிலைகளால், சிலருக்கு உடல் சூடு தணியாது; அடிக்கடி சூடு இருக்கும். அதுபோல, வெளியில் சுற்றும் பணியில் இருப்பவர்கள் போன்றவர்களுக்கும் உடல் சூடு இருக்கும். சுற்றுலா சென்றுவிட்டு திரும்பினால் சூடாக இருக்கும். ஏன், வெளியில் மணிக்கணக்கில் சுற்றிவிட்டு வந்தாலும் சூடு தணிய வெகுநேரம் ஆகும். சிலருக்கு இந்த சூடு தானாக, அவர்கள் உடல் தன்மைக்கு ஏற்ப தணிந்து விடும். சிலருக்கோ, வேறு கோளாறில் விட்டுவிடும். அந்த கோளாறு தான், அஜீரணம், பரு வளர்வது போன்றவை.

அதென்ன பி.எச்.ஐ.,
ஒருவரின் உடல் எடை, உயரத்தை வைத்து கணக்கிட்டால், அவருக்கு சரியானதாக தான் இருக்கிறதா, இல்லையா என்று தெரியும் கணக்கீடு தான் “பாடி மாஸ் இன்டெக்ஸ்’ என்று சொல்லப்படும் பி.எம்.ஐ., அளவீடு. இது தாறுமாறாக இருந்தால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அறிகுறி.
இதுபோல தான் பி.எச்.ஐ., அதாவது, “பாடி ஹீட் இன்டெக்ஸ்’ என்பது. உடலில் வெப்ப அளவை கணக்கிடும் அளவீடு. சராசரியாக ஒருவருக்கு 98.3 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். அப்படி தான் தொடர்ந்து பராமரித்து வர வேண்டும். இந்த அளவில் இருந்தால், எந்த பிரச்னையும் வராது. ஆனால், குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தால் உஷாராகி விட வேண்டும். சிலருக்கு, அவர்களின் பணி, நடமாட்டம், உணவு முறைகளை பொறுத்து உடல் சூடு அதிகமாக இருக்கும். தானாகவே தணியவும் செய்யும்.
சிலருக்கோ, சில சூழ்நிலைகளில் சூடு அதிகமாகி குறையவே குறையாது; அவர்களுக்கு உடனே ஏற்படும் விளைவு தான் அஜீரணம். அதுபோல, இந்த வகை பெண்களுக்கு வருவது தான் முகப்பரு.

எதனால் சூடு வரும்
* தடுப்பூசி போட்டால் உடலில் சூடு அதிகரிக்கும். அதுபோல, ஸ்டிராய்டு ஊசி போட்டாலும் சூடு அதிகரிக்கும். அதைத்தான் காய்ச்சல் என்று சொல்லி மருந்து தரப்படுகிறது.
* மது குடிப்பவர்களுக்கு, அடிக்கடி சிகரெட் பிடிப்பவர் களுக்கு உடலில் சூடு அதிகமாக இருக்கும்.
* மாதவிடாய் மற்றும் மகப்பேறு சமயங்களில் சில பெண்களுக்கு இந்த பிரச்னை இருக்கும்.
* தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கும் சூடு, உடலில் அதிகமாக இருக்கும்.
* நீண்ட தூர பயணங்களுக்கு பின், உடல் சூடு காணும்.

எப்படி சமாளிப்பது?
உடலில் உள்ள சீரற்ற தன்மையை சரி செய்ய ஒரே வழி உணவும், பழக்க வழக்கங்களும் தான்.
நம் வாழ்க்கை முறையில் மாற்றம் இருந்தால் பிரச்னை ஏற் படும். அதுபோல, உணவுகளில் மாற்றம் இருந்தாலும் இதே தொல்லை தான். அதனால், இந்த இரண்டிலும் கவனம் தேவை.
உடலில் சூடு தணிய வேண்டுமானால், உணவில் மாற்றம் ஏற்பட வேண்டும். இப்போது “ஜங்க் புட்’ என்று சொல்லப்படும் கொழுப்பு உணவுகளால் கூட உடலில் மாற்றம் ஏற்படுகிறது. அதனால் தான் இதை சாப்பிடுவோருக்கு ஏதாவது ஒரு கட்டத் தில் பிரச்னை ஏற்படுகிறது.
என்ன உணவு சாப்பிட்டாலும், சத்தான, உடல் ஆரோக்கியத் துக்கு தேவையான பச்சைக் காய்கறி, சத்து உணவுகளையும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு எட்டிப்பார்க்கக்கூட செய்யாது. இதை வளர் இளம் பெண்கள் மனதில் கொள்ள வேண்டும்.

என்ன சாப்பிடலாம்?
வழக்கமான உணவுகளில் பச்சைக் காய்கறிகள், பழங்கள் என்று சேர்த்துக் கொள்வதுடன், இந்த உணவுகள் சேர்ப்பது மிக முக்கியம்.
* தர்பூசணி: தர்பூசணி மட்டுமல்ல, கிர்னி உட்பட பல வகை நீர்ச்சத்து உள்ள பழங்களில் பொட்டாசியம் சத்து உள்ளது. துண்டாக்கியோ, ஜூசாகவோ சாப்பிடலாம்.
* பசலைக்கீரை: பொதுவாகவே கீரை வகைகள் உடலுக்கு நல்லது. மக்னீசியம் சத்துள்ள பசலைக் கீரையை சமைத்து சாப்பிட்டால், உடல் சூடு தணிவதுடன், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது.
* வெள்ளரி: கோடையில் மட்டுமல்ல, பொதுவான சமயங்களில் வெள்ளரியை துண்டாக்கி சாப்பிடலாம். சமைத்தும் சாப்பிடலாம். நார்ச் சத்து உள்ளது.
* தயிர்: சிலருக்கு தயிர், மோர் சாப்பிடும் பழக்கமே இல்லை. இப்போது தான் பழக்கத்தை ஆரம்பித்துள்ளனர்.
தயிர் சாப்பிடுவது மிக நல்லது. சூடு தணிந்து, இதத்தை தரும் தயிர், கண்டிப்பாக சாப்பாட்டில் சேருங்கள்.
இப்படி எத்தனையோ சத்தான உணவுகள் உள்ளன. என்ன தான் ஜாலிக்காக வெளியில் வாய்க்கு ருசி என்று நினைத்து சாப்பிட்டாலும், இந்த சத்தான உணவுகளை மறக்கவே கூடாது தானே.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply