உங்கள் தலையில் பேன் தொல்லையா?

Loading...

உங்கள் தலையில் பேன் தொல்லையா* வேப்பிலையை நீரில் போட்டு நன்கு காய்ச்சி, அந்த நீரைக் கொண்டு தலைமுடியை அலசி வந்தால், தலையில் உள்ள பேன், பொடுகு போன்றவை அகலும்.

*
1 டீஸ்பூன் மிளகு மற்றும் 1/2 டீஸ்பூன் சீரகத்தை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி, அந்த எண்ணெயை வாரம் மூன்று முறை தலைக்கு தடவி மசாஜ் செய்து 1/2 மணிநேரம் ஊற வைத்து, சீகைக்காய் போட்டு அலச வேண்டும். இதனாலும் பேன் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

* தேங்காயை அரைத்து பால் எடுத்து, அதனைக் கொண்டு வாரம் இரண்டு முறை தலையை அலச வேண்டும். இதன் மூலமும் பேன் தொல்லை தீரும்.

* 10 பல் பூண்டை அரைத்து பேஸ்ட் செய்து, அதனுடன் 3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இதனால் பூண்டின் வாசனையிலேயே பேன் போய்விடும்.

* எறும்பு பொடியை நீரில் கலந்து, அந்த நீரைக் கொண்டு தலையை மசாஜ் செய்து 1/2 மணிநேரம் ஊற வைத்து பின் சீகைக்காய் போட்டு நன்கு தேய்த்து குளிக்க வேண்டும். முக்கியமாக இந்த வழியை பின்பற்றினால், பேன் இறந்து உதிர்வதை நன்கு காணலாம்.

* சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை ஸ்கால்ப்பில் படும் படி மசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைத்து அலச வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply