உங்கள் சருமம் கருப்பாக இருக்கிறது என்ற கவலையா?

Loading...

உங்கள் சருமம் கருப்பாக இருக்கிறது என்ற கவலையாமுகம் பொலிவோடு இருக்க வேண்டுமெனில், தினமும் முகத்தைக் கழுவுவது என்பது முக்கியமான ஒன்று. ஏனெனில் முகத்தில் தூசிகள் படிந்திருப்பதால், முகம் பொலிவின்றி காணப்படும். எனவே அவ்வப்போது முகத்தை சுத்தமான நீரினால் கழுவினால், முகம் நன்கு சுத்தமாக பருக்களின்றி இருக்கும்…..

கற்றாழை ஒரு சிறந்த கிளின்சிங் பொருள். எனவே கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, காய வைத்து கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்து நீங்கி, முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

தினமும் அதிகப்படியான தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சருமம் மின்ன ஆரம்பிக்கும்.

முகத்தில் ஒரு நல்ல பொலிவு வரவேண்டுமெனில், மேற்கூறியவற்றுடன் தினமும் காலையில் எழுந்து லேசான உடற்பயிற்சிகளை தவறாமல் மேற்கொண்டால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முகத்தில் உள்ள சோர்வு நீங்கி, இயற்கையாகவே முகம் அழகாக இருக்கும்.

Loading...
Rates : 0
VTST BN