உங்கள் அழகைப் பாதுகாக்கும் சமையலறை

Loading...

உங்கள் அழகைப் பாதுகாக்கும் சமையலறைஉங்களுடைய அழகுப் பாதுகாப்புக்குத் தேவையான பலவிதமான பொருட்கள் உங்கள் அருகிலேயே இருக்கின்றன. சில பொருட்களால், உண்மையான பலன் கிட்டும்; சில பொருட்கள் நாளடைவில் பக்க விளைவுகளை உண்டாக்கும். இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் சரியான முறையில் உபயோகப்படுத்தினால், தேவையான பயனளிக்கும். உங்கள் சமையலறையிலேயே உங்கள் பிரச்சினைகளுக்கான மருந்துகள் உள்ளன. அவைகளை எப்படி உபயோகிப்பது என்று பார்க்கலாம்.

வெந்தயம்;
வெந்தயத்திற்கு கிருமிநாசினியாகவும், தோல் நிவாரணியாகவும் செயலாற்றும் சக்தி உண்டு. இது முகத்தில் உண்டாகும், கரும் புள்ளிகளையும், பருக்களையும் போக்கும் சக்தி கொண்டது. இது தலை முடிக்கு ஒரு நல்ல கண்டிஷனராகவும் பயன்படுகிறது. வெந்தயம் பொடுகையும் முடி உதிர்வதையும் தடுக்கிறது. வென்டஹ்யத்தை நன்கு கொதிக்க வைத்தபின், நைஸாக அரைத்து, ஃபேஸ் பேக்காக உபயோக்கிக்கவும், முடிக்கும் தேய்த்துக் குளிக்கலாம்.
ஓட்ஸ்:
ஓட்ஸில் அவெனாந்த்ரமைட்ஸ், ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் தோல் -நோய்த்தடுப்பு சக்தியும் நிறைந்துள்ளது. இவை காய்ந்துபோன தோலுக்கும், எரிச்சல் உண்டாக்கும் தோலுக்கும் நமைச்சல் எடுக்கும் தோலுக்கும் ஏற்ற நிவாரணி. இது மரு உண்டாக்கும் தோலுக்கு மிகவும் ஏற்றது. ஏனென்றால் இது தோலின் மேற்புறத்தில் படிந்துள்ள எண்ணெய்ப் பசையை உறிஞ்சிவிடுகிறது. அரை கப் ஓட்ஸும் அரை கப் தயிரும் சேர்த்துக் கலக்கி அதில் சில துளிகள் வாய்ட்டமின்-இ எண்ணெயைக் கலந்து அதை உடம்பில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்துக் குளிக்கலாம்.
எலுமிச்சை ஜூஸ்:
இதில் வைட்டமின் -சி-யும் ஆண்டிஆக்ஸிடன்ட்ஸும் நிறைந்து காணப்படுகிறது. இதற்கு தோலிலிருக்கும் தேவையற்ற மாசுகக்ளை உதிர வைக்கும் சக்தியுள்ளது. மருக்களை நீக்கி தோலை பளபளக்கச் செய்கிறது. உஷ்ணத்தினால் ஏற்படும் கொப்புளங்களையும் போக்கவல்லது. கொஞ்சம் எலுமிச்சைச் சாறும், தேன் அல்லது சர்க்கரையையும் கலந்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து முகம் கழுவவும். நாளடைவில் முகத்தில் உள்ள மாசுக்கள் நீங்கி முகம் பொலிவடையும்.
பேக்கிங் சோடா:
இதனை பற்களை சுத்தம் செய்யவும், பற்களில் உள்ள கறைகளைப் போக்கவும் பயன்படுத்தலாம். பேக்கிங் சோடாவை முகம் கழுவும் ஃபேஷியலுடன், தண்ணீர் சேர்த்துக் கலந்து பேஸ்ட் போலாக்கி முகத்தில் தடவி முகம் கழுவவும். முகம் பளிச்சிடும்.
தேங்காயெண்ணெய்:
தேங்காயெண்ணெய் வயதாவதைக் குறைத்துக் காட்டும். முகத்தில் ஈரப்பசையைத் தக்க வைக்கும். பாதங்களில் தடவி வந்தால், பாதங்கள் மிருதுவாகும். குதிகாலில் உள்ள வெடிப்புகளைப் போக்கும். ப்ரௌன் சுகரையும், கடல் உப்பையும் தேங்காயெண்ணெயுடன் கலந்து ஒரு பேஸ்ட் போலாக்கவும். முகத்திலும் பாதங்களிலும் தடவி வந்தால் அந்த இடங்கள்
பொலிவு பெறும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply