உங்களுக்கு மரு இருக்கிறதா?

Loading...

உங்களுக்கு மரு இருக்கிறதாமுகத்தில் மருக்கள் இருப்பது பெரிய பிரச்சினையாகத்தான் இருக்கும். சின்னதாக இருப்பது பெரிதாக ஆரம்பிக்கும். குறைவாக இருப்பது நிறைய தெரிய ஆரம்பிக்கும். இதை போக்க இதோ சில வழிகள்:

* எருக்கஞ்செடி இலையின் பாலை தோலின் மேல் படாமல் மருவின் மேல் மட்டும் படும்படி தடவணும்.

* துணிதுவைக்கும் சோப், சுண்ணாம்பு இவ்விரண்டையும் சம அளவு எடுத்து கடுகளவு சோடா உப்பைக் கலந்து குழைத்து தோலின்மேல் படாமல் மருவின் மேல் மட்டும் படும்படி தடவவேண்டும்.

* சந்தனம், மிளகு, ஜாதிக்காய் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து மைய அரைத்து தோலின் மேல் படாமல், மருவின் மேல் மட்டும் படும்படி தடவ வேண்டும்.

* கொட்டாங்குச்சியை நெருப்பில் வாட்டி அதிலிருந்து வரும் எண்ணெயைக் குழைத்து தடவணும்.

* மருவின் அடிப்பாகத்தில் தலைமுடி அல்லது குதிரைவால் முடிகொண்டு இறுக்கமாகக் கட்டணும்.

* இரண்டு அல்லது மூன்று பூண்டு பற்களை மைய அரைத்து இரவில் தூங்கச் செல்வதற்கு முன் மருவின்மீது வைத்து ‘ பேண்ட் எய்ட் ‘ பட்டையால், மூடி ஒட்டிவிடணும்.

மேற்கூறப்பட்ட இயற்கை வைத்திய முறைகளை முறையாக செய்து வந்தால் ஒரிரு நாட்களிலேயே பலன் தெரியும்.

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN