இலங்கை முட்டைகோவா வறை

Loading...

இலங்கை முட்டைகோவா வறைமுட்டை கோஸ் – 500g
வெங்காயம் – 50g
ப.மிளகாய் – 3
தேங்காய் பூ – 2 மேசை கரண்டி
எண்ணை – 2 மேசை கரண்டி
சோம்பு – 1 தே.கரண்டி
உள்ளி – 3 பல்லு
மிளகு – 1/2 தே.கரண்டி
மஞ்சள் – 1/2 தே.கரண்டி
உப்பு – தேவைகேற்ப

முதலில் மு.கோவாவை கழுவி மெல்லிதாக அரிந்து எடுத்து உப்பு, மஞ்சள் போட்டு கலந்துவைக்கவும்.
வெங்காயம்,பச்சமிளகாயையும் சின்ன சின்னதாக நறுக்கி எடுத்து கொள்ளவும்
பின்பு வாணலியில் எண்ணை விட்டு கொதித்தவுடன் சோம்பு வெங்காயம்,உள்ளி கறிவேப்பிலை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்
பின் மு.கோவையும் போட்டு அது சுருளும் வரை 5 or 6 நிமிடங்கள் வதக்கவும்.
ப.மிளகாய், மிளகு போட்டு கிளறி மெல்லிய வெப்பத்தில் 1நிமிடம் மூடி வைத்து இறக்கும் போது தேங்காய்பூ கலந்து இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply