இரவு 9 மணிக்கு மேல் நிச்சயம் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்!!! | Tamil Serial Today Org

இரவு 9 மணிக்கு மேல் நிச்சயம் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்!!!

இரவு 9 மணிக்கு மேல் நிச்சயம் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்!!!இரவு உணவுக்குப் பின் இதெல்லாம் செய்யாதீங்க!!

பால்

இரவில் 9 மணிக்கு மேல் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். பாலில் எவ்வளவு தான் புரோட்டீன், கால்சியம் இருந்தாலும், இரவில் படுக்கும் முன் குடித்தால், அதில் உள்ள லாக்டோஸ் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி, நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் செய்துவிடும்.

பாஸ்தா

இரவு நேரத்தில் பாஸ்தா உட்கொள்வதைத் தவிர்க்கவும். ஏனென்றால் பாஸ்தாவில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், இரவில் தூங்க முடியாது. ஆகவே இதனை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

சாக்லேட்

பலருக்கு சாக்லேட் மிகவும் விருப்பமான ஒன்று. இதில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் இருக்கிறது. ஆகவே இதனை இரவில் சாப்பிட்டால், நல்ல தூக்கத்தைப் பெற முடியாமல் போய்விடும். இப்படி தினமும் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாவிட்டால், உடலில் கார்டிசோல் அளவு அதிகரித்து, திசுக்கள் உடைய வழிவகுக்கும்.

பச்சை மிளகாய்

பச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும். ஆனால் அதனை பகல் நேரத்தில் சாப்பிட்டால் நல்லது. அதுவே இரவில் பச்சை மிளகாய் சேர்த்து செய்யப்படும் உணவை சாப்பிட்டால், தூக்கமின்மை ஏற்படும். பின் பகல் நேரத்தில் சோர்வுடனேயே இருக்க நேரிடும்.

Loading...
Rates : 0
VTST BN