இட்லி மஞ்சுரியன்

Loading...

இட்லி மஞ்சுரியன்இட்லியே பிடிக்காதவங்க கூட மிகவும் விரும்பும் இட்லி மஞ்சுரியன். செய்வது மிகவும் எளிதுதான்.

தேவையான பொருட்கள்:-

இட்லி – 3
வெங்காயம் – 1
தக்காளி – 2
உப்பு – சுவைக்கு
மிளகாய்தூள் – அரை ஸ்பூன்
தனியாதூள் – அரை ஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
எண்ணெய் – 3 ஸ்பூன்
குடைமிளகாய் – 1 சிறியது
கொத்தமல்லி – சிறிதளவு
வெங்காயத்தாள் – சிறிதளவு
ப.மிளகாய் – 1

செய்முறை:-

• வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், வெங்காயத்தாள், குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• இட்லியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

• ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்…கொஞ்சம் கலர் மாறியதும் அதில் உப்பு, மிளகாய்தூள், தனியாதூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

• அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

• தக்காளி சிறிது வதங்கியதும் குடைமிளாயை சேர்த்து சிறிது வதக்கியபின் வெட்டிய இட்லியை போட்டு உடையாமல் கிளறி கடைசியாக கொத்தமல்லி தழை, வெங்காயத்தாள் சேர்த்து பிரட்டி இறக்கவும்.

• சுவையான இட்லி மஞ்சுரியன் ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply