இட்லி பொடி சாதம்

Loading...

இட்லி பொடி சாதம்தேவையான பொருட்கள் :

சாதம் – 2 கப்
இட்லி பொடி – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 3 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
பூண்டு – 4 பல்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

• முதலில் பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

• பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்கி இறக்கி விட வேண்டும்.

• பின்பு அதனை சாதத்தில் ஊற்றி, நன்கு கிளற வேண்டும்.

• கடைசியாக அதில் எலுமிச்சை சாறு, இட்லிப் பொடி மற்றும் உப்பு போட்டு மீண்டும் கிளற வேண்டும்.

• இப்போது சுவையான இட்லிப் பொடி சாதம் ரெடி!!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply