இடுப்பு சதையை குறைத்து ஃபிட் ஆக வேண்டுமா?

Loading...

இடுப்பு சதையை குறைத்து ஃபிட் ஆக வேண்டுமாஇடுப்பு பகுதியில் அதிகப்படியான சதை சிலருக்கு இருக்கும். அவர்கள் இந்த ஸ்டாண்டிங் லெக் ரொட்டேஷன் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். விரிப்பில நேராக நின்றுகொண்டு கைகளை பின்னால் கட்டிக் கொள்ள வேண்டும். இப்போது வலது காலை மட்டும் முன்பக்கமாக சற்று மேலே உயர்த்தி மெதுவாக வட்டமாகச் சுழற்றி பழைய நிலைக்கு வரவேண்டும்.

இதேபோல் இடதுகாலுக்கு செய்யவேண்டும். இருகால்களுக்கும் தலா 20முறை செய்யவேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்யும்போது இடுப்புபகுதியில் வலி இருக்கும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30முறைசெய்யலாம். ஆரம்பத்தில் நேராகநின்று இந்த பயிற்சி செய்ய முடியாதவர்கள் சுவற்றை பிடித்து கொண்டு செய்யலாம்.

பலன்கள் : இது இடுப்பு மற்றும் தொடைப் பகுதிக் கான பயிற்சி. இடுப்பு பகுதியில்உள்ள கொழுப்பைகரைத்து ஃபிட்டாக்கும். அதேபோல் தொடையின் பக்கவாட்டு சதை மற்றும் உள்சதையை வலிமைப்படுத்தி ஃபிட்டாக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply