இடியாப்ப கொத்து

Loading...

இடியாப்ப கொத்துஇடியாப்பம் – 10
உருளைக்கிழங்கு – 3 சிறியது
தக்காளி – 2 சிறியது
நறுக்கிய கோஸ், காரட் கலவை – ஒரு கப்
ஊறவைத்த சோயாமீற்(சோயா உருண்டை) – அரை கப்
அவித்த கடலை – ஒரு கப்
நீளமாக வெட்டிய வெங்காயம் – அரை கப்
நீளமாக வெட்டிய உள்ளி (பூண்டு) – அரை கப்
நீளமாக வெட்டிய பச்சை மிளகாய் – 3
குறுணலாக வெட்டிய இஞ்சி – ஒரு தேக்கரண்டி
கிராம்பு – 4
ஏலம் – 3
கறுவா (பட்டை) – 2 அங்குலத் துண்டு
கஜு (முந்திரி) – 20 கிராம்
ரெய்சின் (உலர்ந்த திராட்சை) – 15 கிராம்
கடுகு – சிறிது
பெரிய சீரகம் (சோம்பு) – சிறிது
வெந்தயம் – சிறிது
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
சாம்பார் தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
வெண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை/கொத்தமல்லித்தழை – சிறிது

வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். காரட், முட்டைகோஸ் இரண்டையும் நறுக்கி ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.

சோயா உருண்டைகளை ஊற வைத்து எடுத்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதேபோல் உருளைக்கிழங்கு, தக்காளி ஆகியவற்றையும் சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

இடியாப்பத்தை தனியே செய்து வேகவைத்து எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். இடியாப்ப செய்முறை ஏற்கனவே படங்களுடன் இந்த பகுதியில் வெளியாகி உள்ளது.

கிராம்பு, ஏலம், கறுவா(பட்டை) எல்லாவற்றையும் வெறும் வாணலியில் லேசாக வறுத்து எடுத்து, பொடியாக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, பெரிய சீரகம், நீளமாக வெட்டிய வெங்காயம், உள்ளி, பச்சை மிளகாய், உருளை, சோயா உருண்டை ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.

பின்னர் அவித்த கடலை, நறுக்கிய கோஸ், காரட் கலவையை சேர்த்து வதக்கவும். கலவை ஓரளவு வதங்கியதும் ஒரு கப் நீர் விட்டு மூடி வைத்து அவிய விடவும்.

சற்று நேரம் கழித்து திறந்து அதில் நறுக்கின தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள், உப்பு சேர்த்து கிளறி மேலும் சிறிது நேரம் வேக விடவும்.

கலவை நன்கு வெந்து ஓரளவு நீர் வற்றியதும் குறுணலாக வெடிய இஞ்சி (பொடியாக நறுக்கின இஞ்சி), வெந்தயம் சேர்த்து கிளறவும்.

கலவை நன்கு நீர் வற்றி சுருண்டதும் பொடியாக்கிய ஏல, கிராம்பு கலவையை போட்டு கிளறி மூடி 2 நிமிடங்கள் மெல்லிய நெருப்பில் வைக்கவும்.

அதன் பின்னர் உதிர்த்த இடியாப்பத்தைக் கொட்டி கறியுடன் சேரும் வரை நன்கு கிளறவும்.

எல்லாம் ஒன்றாக சேரும் வரை சிறிது நேரம் வேக விடவும். இப்போது சுவையான இடியாப்ப கொத்து தயார்.

இதனை பரிமாறும் தட்டில் கொட்டி பரவி பட்டரில் வறுத்த கஜு(முந்திரி), ரெய்சின்(திராட்சை) மற்றும் கறிவேப்பிலை/கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply