இஞ்சி குழம்பு

Loading...

இஞ்சி குழம்புதேவையான பொருட்கள் :

வறுத்து அரைக்க:

காய்ந்த மிளகாய் – 4
தனியா – 2 டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு, வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன்
இஞ்சி – 50 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு
நல்லெண்ணெய் – 1 குழி கரண்டி
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு

செய்முறை :

• வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• இஞ்சியை தோல் சீவி துருவிக்கொள்ளவும்.

• புளியை கரைத்து கொள்ளவும்.

• வறுக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் விட்டு பக்குவமாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.

• வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும்.

• அதில் நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி, கறிவேப்பிலை, சேர்த்து வதக்கவும்.

• நீர்க்கக் கரைத்த புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

• இரண்டு கொதி வந்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

• எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

• இந்தக் குழம்பை மண்சட்டியில் வைத்தால் சுவை அதிகமாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply