ஆயுர்வேதம் – வாத பித்தம் சீற்றமடைந்த இதய நோய் | Tamil Serial Today Org

ஆயுர்வேதம் – வாத பித்தம் சீற்றமடைந்த இதய நோய்

Loading...

ஆயுர்வேதம் – வாத பித்தம் சீற்றமடைந்த இதய நோய்ஆயுர்வேதத்தில், இதயத்தின் செயல்பாடுகளை சரிப்படுத்துவதற்கு, மிகச் சிறந்த மருந்துகள் உள்ளன. மிக நல்ல முறையில், இதய நோயாளிகள் சிகிச்சை பெற்று, நிவாரணம் அடைந்து வருகின்றனர். அலோபதி மருந்துகள் உட்கொள்ளும் இதய நோயாளிகளுக்கு, அம்மருந்தை சிறிது சிறிதாக குறைத்து, ஆயுர்வேத மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இதனால், அவர்களுடைய ஆரோக்கியம் நல்ல முறையில் தேறி வருகிறது.
60 வயது நபர் ஒருவருக்கு, புகைப் பழக்கம், குடிப் பழக்கத்தால், வயிற்றில் எரிச்சல், வலியிருந்தது. உணவில் மாமிசமும், எண்ணெயும் மிக அதிகம். 1980ல், அவருக்கு நெஞ்சுவலி வந்தது. Myocardial infection. உடல் வியர்த்து, வாந்தியும் எடுத்தார்.
அப்போது, திண்டுக்கலில் உள்ள, அலோபதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 2010ல், செங்கல்பட்டில், வயலில் உள்ள மரத்தடியில் உட்கார்ந்திருந்தபோது, தேனீக்கள் அவரை கொட்டின. தேனீக்களிடம் இருந்து தப்ப ஓடிய போது, அவருக்கு மூச்சிரைப்பு ஏற்பட்டது. தேனீக்கள் கொட்டியதால், முகத்தில் வீக்கமும், வலியும் ஏற்பட்டது. திருப்போரூரில் உள்ள அலோபதி மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு, ஊசி போடப்பட்டது.
மாலை 4 மணி வரை ஒன்றும் சாப்பிடவில்லை. 15 நிமிடம் கழித்து, ஆட்டோவில் செல்லும் போது, தீவிர நெஞ்சுவலி ஏற்பட்டது. அவ்வலி, இடது கைக்கும் பரவியது. உடல் வியர்த்துக் கொட்டியது; வாந்தியும் எடுத்தார்.
உடனே, அருகிலிருந்த பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். “ஆஞ்ஜியோபிளாஸ்டி’ செய்யுமாறு அங்கு அறிவுறுத்தியதால், மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஐ.சி.யூ., வில் அனுமதிக்கப்பட்டு, “ஆஞ்சியோ பிளாஸ்டி’ செய்ய தயார் செய்யப்பட்டார்.
அலோபதி மருத்துவ விதிமுறைகளுக்கு முரணாக, அவர், அந்த மருத்துவமனையிலிருந்து வெளியேறி, என்னிடம் வந்தார். அப்போது அவருக்கு வலியும், குமட்டலும், தலை சுற்றலும் இருந்தது. அவருடைய உணவு பழக்க வழக்கங்களையும், நோயின் அறிகுறிகளான, தீவிர வலி, தலை சுற்றல், வியர்வை, தாகம், எரிச்சல், புளித்த ஏப்பம் இவற்றையும் வைத்து, இது வாதபித்தம் சீற்றமடைந்த இதய நோய் என கண்டறியப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்., 1ம் தேதி, நோயாளிகள் பிரிவில் தங்க வைத்து, அவருக்கு தான்வந்திரம் குடிகா, வாயு குடிகா, அர்சுன (மருதம்பட்டை) தவக் கஷாயம், ஹ்ருத்ய சூர்ணம், ப்ரபாகரவடி ஹ்ருத்யாவரண ரசம் கொடுக்கப்பட்டன. இதே மருந்துகள், மூன்று வேளை வீதம், 10ம் தேதி வரை தரப்பட்டன. 4ம் தேதி, தலைச்சுற்றல் குறைந்தது. 7ம் தேதி நடக்க ஆரம்பித்தார். 10ம் தேதி, எந்த தொந்தரவும் இல்லாமல், நீண்ட தூரம் நடக்க முடிந்தது. 12ம் தேதி படியேறி, இறங்கினார்.
மேற்கூறிய மருந்துகளை, சிறிது நாட்கள் சாப்பிடுமாறும், புகை பிடித்தல், குடிப்பழக்கம் இவற்றை அறவே நிறுத்துமாறும், உணவில் உப்பு, புளிப்பு, காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது. ஒரு மாதம் கழித்து மீண்டும் வந்தபோது, அவர் பழையபடி வேலை செய்வதாகக் கூறினார். இவருக்கு இந்த முறை வந்த மாரடைப்பின் காரணம், இவருக்கு போடப்பட்ட ஊசியாகவும், இவருடைய உணவு பழக்க வழக்கங்களும் இருக்கலாம்.

Loading...
Rates : 0
VTST BN