ஆப்பிள் பான்கேக்

Loading...

ஆப்பிள் பான்கேக்ஆப்பிள் – 3
மைதா – அரை கப்
சோளமாவு – கால் கப்
பால் – ஒன்றரை கப்
வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
சீனி – 4 மேசைக்கரண்டி
பட்டை – ஒரு சிறியத்துண்டு
எலுமிச்சைசாறு – 2 தேக்கரண்டி

மைதாமாவு, சோளமாவுடன் பாலினைச் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பிறகு சிறிதுசிறிதாக வெண்ணெயையும் பாலையும் சேர்த்து நன்கு மிருதுவாக இட்லி மாவு பதத்தில் பிசைந்து வைத்து மூடி வைத்துவிடவும்.
ஆப்பிளை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அதில் ஆப்பிள் துண்டங்களைப் போட்டு அதனுடன் பொடித்த பட்டைத்தூள், எலுமிச்சை சாறு மற்றும் ப்ரெட் தூள்களைச் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
தோசைக்கல் அல்லது பானில் கலக்கி வைத்துள்ள மாவினை சிறிய தோசை போன்று ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.
அதனுள் ஆப்பிள் கலவையை வைத்து ஸ்பிரிங் ரோல்ஸ் போல் உருட்டிக் கொள்ளவும்.
மீண்டும் சிறிதளவு வெண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply