ஆந்திரா பிரியாணி

Loading...

ஆந்திரா பிரியாணிபாசுமதி அரிசி – அரை கிலோ
மட்டன் – 3/4 கிலோ
வெங்காயம் – அரை கிலோ
தக்காளி – 300 கிராம்
பச்சை மிளகாய் – 100 கிராம்
ஏலக்காய், பட்டை, கிராம்பு – தலா 2
தயிர் – 300 மில்லி
இஞ்சி பூண்டு விழுது – 3 டேபிள் ஸ்பூன்
மல்லிக்கீரை – 2 கட்டு
எலுமிச்சைப்பழம் – பாதி
பாதாம் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
மசாலாத்தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிறிய ஸ்பூன்
எண்ணெய் – 150 மில்லி
நெய் – 100 மில்லி
கேசர் கலர் பவுடர் – ஒரு ஸ்பூன்
உப்பு – 3 டீஸ்பூன்

கறியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, அத்துடன் பொடியாக நறுக்கிய 50 கிராம் பச்சை மிளகாய், தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்தூள், மசாலாத்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிரட்டி சுமார் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெயும், நெய்யும் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தில் மூன்றில் ஒரு பங்கை பொன்னிறமாக (தீயாமல்) பொரித்து எடுத்துக்கொண்டு, மீதி 50 கிராம் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி, பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
அதே எண்ணெயில் மீதி வெங்காயம், ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, இஞ்சி பூண்டு போட்டு முறுக ஆரம்பிக்கும்போது வெட்டிய தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.
பிறகு பிரட்டி வைத்துள்ள கறியைக்கொட்டி வேக வைக்கவும். வெந்தவுடன் அத்துடன் பாதாம் தூள், நைசாக நறுக்கி வைத்துள்ள மல்லிக்கீரை தூவி, எலுமிச்சைப்பழச்சாறு ஊற்றவும்.
அரிசியை பதமாக வடித்துக்கொட்டி, கலர் பவுடரை ஒரு ஸ்பூன் தண்ணீரில் கரைத்து அரிசி மேல் தெளித்து, பொரித்த வெங்காயம், பச்சை மிளகாயை அதன் மேல் தூவி தம்மில் போடவும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply