ஆண்கள் அழகிற்கு !!

Loading...

ஆண்கள் அழகிற்கு !!கூந்தல் ஆண்களும் தலைமுடியை பராமரிப்பதில் நல்லஆர்வம் காட்டுகிறார்கள்.
கவர்ச்சிகரமாக முடிவெட்டிக் கொள்வது, அவ்வப்போது ஸ்டைலை மாற்றிக் கொள்வது இளைஞர்களின் வாடிக்கையாக இருக்கிறது. இதுமட்டும் கேசப் பராமரிப்பிற்குப் போதுமானதல்ல. முடிகள் உடைந்து, உதிர்ந்து போகாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
தலையில் பொடுகுகள் பெருகுவது இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே சீயக்காய், ஷாம்பு போன்ற ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் கூந்தலைப் பராமரிக்கலாம்.
ஆடை மற்றும் அணிகலன்கள்
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆண்கள் ஆடைகளைத் தேர்வு செய்யும்போது, நீங்கள் போகவிருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி மனதில் கொள்ள வேண்டும்.
நண்பர்களுடம் போவதாக இருந்தால் நார்மல் உடையே போதுமானது
நெருங்கிய உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு போகும் போது சேர்வானி டிரேஸ் நன்றாக இருக்கும் சின்ன நிகழ்ச்சிக்கு ஜீன்ஸ் அணிந்துகொண்டு அதற்குப் பொருத்தமாக வெள்ளை குர்தா அணிந்தால்,கேஷுவலாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும்.
இன்னும் தென்னிந்திய அழகு கிடைக்க, பட்டுவேட்டியும் ஜிப்பாவும் நல்ல காம்பினேஷன். அழகக இருக்கும் ஆடைகள் வாங்கும் போழுது வெள்ளை, கறுப்பு, க்ரே, லைட்பிங்க், லைட்ப்ளூ லைட் எல்லோ, போன்ற நிறங்கள் ஷர்ட்களுக்கு நல்லாய் இருக்கும்.
எல்லோரிடமும் கல கலப்பாக பேசுங்கள்.நல்ல பேச்சாளன் என்ற பெயரை வாங்குங்கள்.அப்போதுதான் நீங்கள் ஒரு இடத்தைவிட்டு நகர்ந்தாலும் அங்கு உங்களின் நினைவை நீங்காமல் இடம்பெறச் செய்வது உங்களது கனிவான பேச்சுதான்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply