ஆண்களின் சரும பாதுகாப்பு

Loading...

ஆண்களின் சரும பாதுகாப்புசருமத்தை பொருத்த வரை அதன் பராமரிப்பு பெண்களுக்கே உரியது என்ற கருத்து முக்கால் வாசி ஆண்களிடம் நிலவுகிறது. ஆண்கள் அதிகபட்சமாக எப்போதாவது சென்ட்டும், தினசரி ஷேவிங் கிரீமும் தான் பயன்படுத்துகின்றனர். ஆண்கள் சருமம் பெண்களின் சருமத்தை விட 20 லிருந்து 30% தடிமனானது. இதனால் சுருக்கம் விழுவது குறைவு. உடலில் முடி அதிகம் இருப்பதால் அதிக எண்ணை சுரக்கிறது. எனவே ஆண்களின் முகத்தில் எண்ணைப்பசை அதிகமாக இருக்கும். இதனால் பெண்கள் அளவு ஆண்களின் முகம் முதிர்ச்சியடைவதில்லை. தவிர முகக்ஷவரம், இறந்த சரும செல்களை உடனே நீக்கிவிடுவதால் முகம் இளமையாக இருக்கும். இந்த அனுகூலங்கள் இருந்தும் ஆண்களின் சருமமும் பருக்கள், மருக்களால் பாதிப்படைகின்றன. சரும புற்றுநோய்களுக்கு ஆளாகின்றனர். எளிய முறைகளில் ஆண்கள் சரும பாதிப்புகளை சமாளிக்கலாம். வெய்யிலில் அலைவதை தவிர்த்தாலே போதும். சூரிய ஒளியின் அல்ட்ரா – வயலட் கதிர்கள், தோலுக்கு பாதிப்பை உண்டாக்கும். தோல்வுற்று நோய்க்கும் காரணம் அல்ட்ரா வயலட் கதிர்கள் தான். எனவே வெய்யிலில் அலைவதை தவிர்க்க முடியாவிட்டால், ஆண்களும் பெண்களைப் போல் சன் ஸ்கிரீன் கிரீம் (அ) லோஷனை பயன்படுத்த வேண்டும். இந்த கிரீம்களில் அளவு இருக்க வேண்டும். எஸ்பிஎஃப் என்றால் சன் புரெடக்சன் ஃபேக்டர். எஸ்பிஎஃப் – 15 என்றால் 75 நிமிடம் நமது தோலை வெய்யிலிருந்து பாதுகாக்கும். தொப்பி அணிவதும் நல்லது. ஆண்களின் சரும பாதுகாப்புக்கு சோப்பே போதுமானது. மிகவும் எண்ணைப்பசை உள்ளவர்கள் வேண்டுமானால் அஷ்ரிடெஜன்ட் லோஷன்களை உபயோகிக்கலாம். முகக்ஷவரத்திற்கு பின் ஆண்கள் பயன்படுத்தும் ஆஃப்டர் சேவ் லோஷன்களால் பெரிதாக பலன்கள் ஏதும் இல்லை என்கின்றன சரும நிபுணர்கள். விட்டமின் சி அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வது நல்லது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply