அவல் புட்டு

Loading...

அவல் புட்டுதேவையான பொருள்கள் :

அவல் – 1 கப்
சீனி – 10 மேஜைக்கரண்டி(விருப்பப்பட்டால்)
தண்ணீர் – 1 1/2 கப்
தேங்காய் துருவல் – 3/4 கப்
உப்பு – 1/4 தேக்கரண்டி

செய்முறை :

• அடுப்பில் கடாயை வைத்து அவலை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். சிம்மில் வைத்து வறுக்கவும். ஆறிய பின் மிக்சியில் பொடித்துக் கொள்ள வேண்டும்.

• தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்து சூடானதும் அடுப்பை அணைத்து விட்டு சுடு தண்ணீரை அவலோடு சேர்த்து நன்கு கிளறி பின் அதனோடு தேங்காய் துருவலையும் போட்டு கிளறவும்.

• ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடானதும் இந்த கலவையை இட்லி தட்டில் அல்லது புட்டு குழலில் வைத்து 10 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்கவும்.

• வெந்ததும் ஒருபாத்திரத்தில் அவல் புட்டு போட்டு அதன் மேலே சர்க்கரை போட்டு சாப்பிடவும். சுவையான அவல் புட்டு ரெடி.

• சர்க்கரை சேர்க்காமல் வாழைப்பழத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply