அவல் அடை

Loading...

அவல் அடைதேவையான பொருட்கள்:

அவல் – ஒரு கப்,
கடலை மாவு, அரிசி மாவு – தலா 4 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 5,
வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன்,
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை,
உப்பு – தேவையான அளவு,

செய்முறை:

• அவலை நன்கு களைந்து பத்து நிமிடம் ஊற வைத்த பிறகு, நீரை வடிய வைத்து உப்பு, இஞ்சித் துருவல், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், எள், கடலை மாவு, அரிசி மாவு, சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பிசையவும்.

• ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி, பிசைந்த மாவில் இருந்து சிறிதளவு எடுத்து அடையாக தட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு, இருபுறமும் வேக விட்டு எடுக்கவும்.

• அனைவரும் விரும்பும் அவல் அடை ரெடி.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply