அவரைக்காய் துவட்டல்

Loading...

அவரைக்காய் துவட்டல்அவரைக்காய் – 20
வேகவைத்த துவரம் பருப்பு – 1/4 கப்
தேங்காய் பூ – 2 மேசைக்கரண்டி
உப்பு – அரைத் தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – பாதி
மிளகாய் வற்றல் – 2
கடுகு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து

அவரைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி எடுத்து வைக்கவும். துவரம் பருப்பை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, குழையாத அளவிற்கு வேக வைத்து எடுக்கவும்.

பொடியாக நறுக்கிய அவரைக்காயை பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் வேக வைக்கவும்.

வேகவைத்த அவரைக்காயை நீரை வடித்து எடுத்து, அரைத் தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கிளறிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளிப் போட்டு வதக்கி, பின்னர் கடுகு போட்டு வெடித்ததும் நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து 30 விநாடி வதக்கவும்.

அதில் வேகவைத்து எடுத்து வைத்துள்ள அவரைக்காயைப் போட்டு நன்கு 2 நிமிடம் கிளறி விடவும்.

அவரைக்காய் வெந்த பிறகு வேகவைத்த பருப்பையும், தேங்காயையும் சேர்த்து கிளறி இறக்கி விடவும்.

சாம்பார் சாதம், ரசம் சாதம் என அனைத்து வகை சாதத்திற்கும் பக்க உணவாக இந்த அவரைக்காய் துவட்டலைச் சேர்த்துக் கொள்ளலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply