அழகுக் குறிப்புகள்

Loading...

அழகுக் குறிப்புகள்* நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்து தழும்பு ஏற்பட்டுவிட்டால், துளசி இலைகளை தேங்காய்ப் பால் சேர்த்து அரைத்து தடவினால், தழும்பு மாறிவிடும்.
* சர்க்கரை ஆரோக்கியத்துக்கு எதிரானது. ஆனால் சருமத்திற்கு ஏற்றது. சருமத்தைப் பராமரிப்பதற்கு சர்க்கரை மிகவும் உதவுகிறது. சர்கக்ரையைத் தண்ணீரில் கரைத்து , 5 நிமிடங்கள் தடவி, குளிர்ந்த நீரில் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும். தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் சர்க்கரை கலந்தும் முகத்தில் தடவி கழுவலாம். சிறிது க்ரீன் டீயில் சர்க்கரை சேர்த்து தடவுங்கள். தோலில் சுருக்கங்கள் நீங்கும். நாட்டுச் சர்க்கரையை எலுமிச்சை சாறு கலந்து , தடவினால், அழுக்குகள், இறந்த செல்கள், நீங்கி சருமம் சுத்தமாகும்.
* ப்ரஷ் கொண்டு பல் துலக்கும்போது மிகவும் அழுத்தியோ அல்லது நீண்ட நேரமோ துலக்குவதால் பல்லிலுள்ள எனாமல் போய்விடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply